பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 மைக்கேல் காவின்ஸ் பினுல் தளர்ந்து விழ நேர்ந்தது. அவர்களுக்கும்கூட வீழ்ச்சிக் காலம் தோன்றிவிட்டது ! கொந்தளித்து அகல்விசி எழுந்த தேசிய வெள்ளத்திற்கு எதிரே அவர்களால் கிலத்து கிற்க முடியவில்லை. அரசாங்க யந்திரத்தின் தலைவராக விளங்கிய ல்ார்டு பிரெஞ்சைத் தாக்கவேண்டும் என்று காலின்ஸ்-க் கும், மற்ற தலைமைக் காரியாலயத்திலுள்ள அங்கத் தினர்களுக்கும் நோக்கம் இருந்தது. அவரைத் தாக்கு வதனால், அயர்லாந்து விடுதலைக்காகத் தொடுத்திருக்கும் போரைப்பற்றி உலகெங்கும் பிரசாரமாகும் என்று அவர்கள் எண்ணினர்கள். ஆல்ை, லார்டு பிரெஞ்ச் எந்த இடத்திற்குச் சென்ருலும், பெரும் பாதுகாப்புடனேயே சென்ருர். அவருடைய போக்குவரத்துகள் யாவும் மிக ரகசியமாகவே இருந்தன. தொண்டர்கள் அவரை எதிர்த்துப் பல சமயங்களில், பல இடங்களில், காத்திருந் தும் பயனில்லாது போயிற்று. ஆல்ை, ஒரு சமயம் லார்டு பிரெஞ்ச் ரோஸ்காமன் தாலுகாவிலுள்ள தமது காட்டுப்புறத்து மாளிகையிலிருந்து டப்ளினுக்கு வருகிற செய்தி காலின்ஸ்-க்கு எட்டியது. டிஸம்பர் 19-ந் தேதி அவர் வருகின்ற தினமாதலால், காலின்ஸ் அவர் ரயிலி லிருந்து இறங்கக்கூடிய இடமாகிய ஆஷ்டவுனுக்குச் சில தொண்டர்களே அனுப்பின்ை. = - பதினெரு தொண்டர்கள் ஆஷ்டவுண் ரயில்வே ஸ்டேஷனுக்குச் சமீபத்தில் கெல்லி என்பவன் விடுதியில் காத்திருந்தனர். அவர்களில், மகா திரஞன தான்பிரீன்,* எlன் டிரீஸி முதலிய திப்பெரரித் தொண்டர்களும்,

  1. =

இவனுடைய சரித்திரம் சுதந்திர வீரன் தான்பிரின் ' என்ற தனி து லாகத் தமிழில் உள்ளது.