பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் முழக்கம் o 143 என்ன விஷயம் எழுதப்பட்டிருந்தது? காலின்ஸ் ரென் விடுதியில் இருப்பதால், அதைப் போலீஸ்-சம் பட்டாள மும் வ&ளங்துகொள்ள வேண்டும் என்பதே அதில் கண்ட விஷயம். அன்று காலையிலேயே குயின் லிஸ்கும் கார்க் நகருக்குச் சென்று, ரென் விடுதியில் காலின்ஸைத் தேடினன். அங்கு காலின்ஸின் அடிச்சுவடே காணப்பட வில்லை. குயின் லிஸ்கினுடைய வஞ்சனே முழுதும் காலின் ஸ்-க்கு விளங்கியது. அவன் டப்ளின் மாளிகைக்கு எழுதிய கடிதமும் காலின்ஸ்-க்குக் கிடைத்து விட்டது. காலின்ஸ் கார்க் நகரத் தொண்டர்களுக்கு ஒர் உத் தரவு அனுப்பின்ை. உடனே தொண்டர்கள் குயின் லிஸ்கைக் கைதி செய்தனர். அவனுடைய தேசத் அரோகத்திற்காக, பெப்ரவரி மாதம் 18-ந் தேதி, அவ அணுக்கு மரண தண்டனே விதித்து நிறைவேற்றிஞர்கள். லின் பீனர்களோடு போராடுவதில் போலிஸ் உளவு இலாகா தவிடு பொடியாய் நொறுங்கி வருவதைக் கண்டு அதிகாரிகள் மனம் கலங்கினர். அவர்கள் தங்கள் ஒற் றர்களேயே நம்ப முடியவில்லை. இங்கிலையில் பெல்பாஸ்டி லிருந்து வில்லியம் ரெட்மண்டு என்பவரை வரவழைத்து, டப்ளின் போலீஸ் உதவிக் கமிஷனராக கியமித்தனர். ரெட்மண்டு அளவற்ற ஆற்றலுடையவர். அவரை எதிர்த்து வேலை செய்வது காலின்ஸ்-க்குப் பெருங் கஷ்டமாக இருந்தது. அவர் நான்கு வாரக் காலமே உத்தியோகம் பார்த்தபோதிலும், அதற்குள் மிகுந்த ஊக்கத்துடன் பல அரிய வேலைகளேச் செய்ய முற்பட் டார். காலின்ஸைப் போலவே அவரும் ஒரு சைக்கிளில் ஏறி டப்ளின் தெருக்களேச் சுற்றுவது வழக்கம். பெல் பாஸ்டிலிருந்து புதிய ஒற்றர்களே வரவழைத்து அவர்