பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் முழக்கம் 145 எல்லோரும் உதவி செய்வார்கள் என்றும் சொல்லிக் காலின்ஸை மகிழ்வித்தான். காலின்ஸ் அவனே நம்பித் தலைமைக் காரியாலயத்தில் உதவி செய்ய நியமித்த போதிலும், டோபின், கல்லென் என்னும் இரு நண்பர்களே அவனேக் கவனித்து வருமாறு வேண்டிக்கொண்டான். கல்லெனுக்கு ஆரம்ப முதலே ஜேம்ஸனிடம் அவநம் பிக்கை உண்டு. ஜேம்ஸன் மிகுந்த சாமர்த்தியத்துடன் கடந்ததால், அவனுடைய அந்தரங்கங்களைத் தெரிவது எளிதா யிருக்கவில்லை. ஒரு நாள் காலின்ஸ் பிரண்டன் ரஸ்தாவிலுள்ள ஒகா னர் என்பவருடைய வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருக் கும் வேளேயில் ஜேம்ஸனே வரவழைத்து அவனுடன் பேசின்ை. பின்னர் அவன் ஜேம்ஸனே மறுநாளும் அதே வேளையில் அங்கு வரும்படி கூறினன். மறுநாள் அவன் குறித்த நேரத்தில் ரெட்மண்டு ஒர் ஒற்றனே அங்கு அனுப பிவைத்தார். ஒற்றர்களின் கூட்டம் ஒன்று மோட்டார் லாறியில் ஏறிக்கொண்டு ஒகானர் விட்டை நோக்கி வந்தது. அந்த லாறி வந்து சேருவதற்கு முன்னுல்தான், ஜேம்ஸன் பேச்சை முடித்துக்கொண்டு, டோபினுடன் வெளியேறிச் சென்ருன். முதலில் அங்கு வந்து காத்திருந்த ஒற்றன், டோபினேக் காலின்ஸ் என்று எண்ணிக்கொண்டு, விரைந்து ஓடி, எதிரே வரும் லாறியை மறித்து, அதிலிருந்த ஒற்றர்களிடம், பறவை தப்பியோடிவிட்டது!’ என்று கூவின்ை. லாறி வந்த வழியே திரும்பியது. அச்சமயத்தில் காலின்ஸ், தனக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய இடுக் கண்ணே அறியாதவய்ை, ஒகானர் வீட்டிலேயே கவலையற்றிருந் தான். மை-10