பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலையிலிருந்து நீக்கப்பட்டார். ஏனென்ருல், அவர் டப்ளின் மாளிகையின் கொடிய நோக்கங்களுக்குத் தக்க படி ஆடுகிறவரல்லர். லார்டு பிரெஞ்ச் தம் நோக்கத்திற்கு இசைந்த வேருெருவரை நியமித்துக்கொண்டார். அதே சமயத்தில், போலிஸாரை வதைத்தும் காயப்படுத்தி யும் வந்தவர்களேக் கண்டுபிடிப்பதற்கு உதவி செய்பவர்களுக்கு 8,000 பவுன் பரிசளிப்ப்தாக விளம் பரப்படுத்தப்பட்டது. 8,000 அல்ல, 30 லட்சம் பவுன் கொடுத்தாலும், தொண்டர்களைக் காட்டிக்கொடுக்க எவரும் முன்வரக் காணுேம். * ஆங்கில அரசாங்கம், அயர்லாந்துக்கு அளிக்கும் சொற்ப சுதந்திரத்தையும் தனியாகக் கொடுத்தால் அதன் உடலுக்கு ஏற்காது என்று எண்ணி, ஒரளவு அடக்கு முறையும் சேர்த்துக் கொடுக்க விரும்பியது. இதுவரை அது கையாண்டு வந்த அடக்குமுறைகளேத் தவிர இன்னும் என்ன பாக்கி யிருக்கிறது ? பல வெறி யர்களே ஒன்று சேர்த்து, கண்ட விடங்களில் ஜனங்களேச் சுட்டுத் தள்ளும்படி இன்னும் அது செய்யவில்லை ; பட்டி களையும், பட்டணங்களையும், வீடுகளேயும், வாசல்களேயும் இன்னும் அது கொளுத்தித் தள்ளவில்லை. அவ்வேலை கஆளப் பூர்த்தி செய்வதற்கு ஐரிஷ்காரரில் தக்க நபர்கள் கிடைக்கவில்லை. ஆதலால், ஆங்கிலேயரில் பலரை ஒரு பட்டாளமாகச் சேர்த்து அயர்லாந்துக்கு அனுப்ப வேண்டும் என்று அது தீர்மானித்தது. இரக்கம் என் பதையே அறியாது, கொடுமையே உருக்கொண்டு விளங் கிய இப்பட்டாளந்தான் பிற்காலத்தில் கறுப்புக் கபிலர்: என்னும் பிரசித்தமான பெயரைப் பெற்றது. இதற்கு i. வேண்டிய ஆட்களேச் சேர்ப்பதற்கு இங்கிலாந்தில் விளம்பரங்கள் ஒட்டப் பட்டன.