பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சியின் வீழ்ச்சி --- 155. தடுத்துவிட்டனர். தொண்டர்கள் எதிர்த்துச் சுட்ட தில் ஒரு ஸார்ஜன்டும் போலிஸ்காரனும் மிகுந்த காய மடைந்தனர். தொண்டர்களில் பாட்ரிக் மக்ராத் என்பவன் காயமடைந்து, கைதியானன். காயங்கள் பலமாயிருந்த தாலும், அவன் கிரந்தரமாக எழுந்து கடமாட முடியாது போனதாலும், அதிகாரிகள் வெகுநாள் அவனே ஆஸ்பத் திரியில் வைத்திருந்து, முடிவில் விடுதலை செய்தனர். இரண்டு தொண்டர்கள் பல போலிஸாரை எதிர்த்துப் போராடிய இந்தச் சம்பவம் காரணமாகப் போலிஸார் விழித்துக்கொண்டனர். மேற்கொண்டு தொண்டர்கள் விஷயத்தில் தலையிடுவது தங்களுக்கு ஒவ்வாது என்று அறிந்துகொண்டனர். ஆல்ை, ஆங்கில ராணுவ அதி காரிகள் தங்களிடம் அனுமதிச் சீட்டுப் பெற்றவர்களைத் தவிர மற்ற யாரும் நள்ளிரவிலிருந்து காலை 5 மணி வரை யும் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்று டப்ளின் நகர் முழுவதும் கர்பியூ’* உத்தரவு பேர்ட்டனர். இக் கொடிய உத்தரவை வலின் பின் இயக்கத்தில் அதுதாப மில்லாதவர்களும் ஆட்சேபித்து எதிர்த்தனர். டப்ளின் நகரசபை, தன் வேலேயாட்களில் எவரும் ராணுவத்தா ரிடம் அதுமதிச் சிட்டு வாங்கக்கூடாது என்றும், முனி சிபல் விளக்குகள் எல்லாம் இரவு 11-30 லிருந்து காலே. 6 மணி வரை அனேக்கப்பட வேண்டும் என்றும் உத்தர விட்டது. கர்பியூ உத்தரவு போட்ட ஒரு வாரத்திற்குள் தொண்டர்கள் அதிகாரிகளின் மூளே கலங்கும்படி ஒரு செயல் புரிந்தனர். இங்கிலாந்திலிருந்து டப்ளின் மாளி கைக்குரிய கடிதங்களேத் தாங்கி வந்துகொண்டிருந்த

  • கர் பியூ உத்தரவு - ஊரடங்கு சட்டம்.