பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சியின் வீழ்ச்சி. 165 லர் நெவில்லி மக்ரெடி என்னும் புதிய சேனதிபதியும் அதே சமயத்தில் அயர்லாந்துக்கு அனுப்பப்பட்டார். அடக்குமுறைகள் வளர வளரத் தொண்டர்களின் உத்வேகமும் வளர்ந்து வந்தது. 1920, ஈஸ்ட்டர் வாரத் தில், தொண்டர்கள் 1916-ம் வருஷத்துக் கலகத்தின் ஞாபகார்த்தமாக மீண்டும் போர் செய்வர் என்று அரசாங்கம் மிகுந்த முன்னேற்பாடுகளேச் செய்து வந்தது. அதன் ஒற்றர்கள் திறமையற்றுப்போன விஷயம் இதிலிருந்தே தென்பட்டது. ஏனெனில், தொண்டர்கள் அவ்வாறு ஒன்றும் ஏற்பாடு செய்யவில்லை. சிறு கூட்டங்களாகச் சென்று தாக்கும் கொரில்லாச் சண்டை மிகுந்த பயன் கொடுத்து வந்ததால், அவர்கள் அதையே பல நாட்களாகப் பின்பற்றி வந்தனர். ஈஸ்ட்டர் வாரம் முழுதும், டப்ளின், கார்க், லிமெரிக், தர்ல்ஸ் முதலிய முக்கியமான நகரங்களுக்கு வரும் ரஸ்தாக்களே எல்லாம் ராணுவத்தார் பாதுகாத்து கின்றனர். அவ் வழிகளில் சென்ற ஜனங்களேச் சோதனே யிட்டனர். ரயில்களில் வந்து இறங்கிய பிரயாணிகளேயும் அவர்கள் சோதனை போடாமல் விடவில்லை. பட்டாளிங்கள் விதிகளில் எல்லாம் சுற்றித் திரிந்து பாதுகாத்தன. யுத்தக் கப்பல்கள் கடற்கரைகளில் வட்டமிட்டுத் திரிந்தன. இத்தனே ஏற்பாடுகளும் ஒரு யுத்தம் ஏற்படும் என்ற யூகத்தினலேயே செய்யப்பட்டன. இக்காலத்திலெல்லாம் தொண்டர்கள் அரசாங் கத்தை அதிரச் செய்வதற்கு மீண்டும் ஓர் பெருஞ்செயல் செய்வதற்கு ஏற்பாடு செய்து வந்தனர். ஈஸ்ட்டர் ஞாயிற்றுக்கிழமைக்கு முந்திய நாள் இரவில், டப்ளின் கார்க் முதலிய சகல நகரங்களிலும் வருமான வரி