பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 மைக்கேல் காலனஸ் வழியாய்க் கொண்டுள்ளோருக்குத் தக்க காகமாயும் செய்' யும் தொழிலே அவர்கள் நடத்திக்கொண்டே வருவார்கள். இந்தக் கொள்கள்களும், தீ வைத்தலும் போலீஸாரைச் சுட்டுத் தள்ளுவதற்குக் குறைந்த புத்தமா? போலீஸ்கர்ானைச் சுட்டுத்தள்ளுவதற்குக் காரணஸ்தன் என்று சந்தேகிக்கப்படுகிற ஒரு மனிதனை அவன் படுக்கை யில் வைத்தே சுட்டுத் தள்ளுவது குறைந்த யுத்தமா? இவ்வசனங்களேப் போன்ற துாண்டுதல்களே அடிக் கடி படித்துவரும் படையினர், சந்தேகப்பட்டவர்களைப் படுக்கையில் வைத்தே சுட்டுத்தள்ள வேண்டும் என்ற உப்தேசத்தை மறந்துவிடாது நடத்தி வந்தனர். இர வில் விடுகளிலிருந்து மனிதர்களை வெளியே கொண்டு வந்து சுட்டுத்தள்ளினர். ஒரு சமயம் ஒரு தொண்டன் விட்டில் காணப்படாமையால், அவன் சகோதரனை ক্ততে கொண்டிப் பையனைச் சுட்டுக் கொன்றனர். மற்ருெரு முறை பத்து வயதுச் சிறுவன். ஒருவனே வதைத்தனர். இச்செயல்களெல்லாம் அத்து மீறிய வெறியர்கள் செயல் என்று கருதக்கூடியவை அல்ல. எல்லாம் ஆங்கிலஐரிஷ் அரசாங்கங்களின் ஆக்கினேயின் பேரிலேயே கடந்: தன. ஜூன் மாதம் 5-ம் தேதி வால்டர் லாங் என்பவர் பார்லிமெண்டில் வெளியிட்ட கூற்று இவ்விஷயத்தை வெட்ட வெளிச்சமாகக் காண்பித்தது. அவர் கூறிய தாவது : ஐரிஷ் போலீஸார் சுடுவதற்கு அநுமதிக்கப் படவில்லை என்ற கூற்றுக்குக் சிறிதும் ஆதாரமில்லை. போலீஸார் சுட்டதுடனன்றி, மிகுந்த பயன் கொடுக்கும் முறையிலும் சுட்டிருக்கின்றனர் என்று கூற நான் ஆனந்த மடைகிறேன். அவர்கள் மேலும் அவ்வாஅர செய்வார்களென்றும் நான் நம்புகிறேன்."