பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறுப்புக் கபிலர் ” 177 == ஆகஸ்டு, 14-ம் தேதி, லிமெரிக் தாலுகாவில் பாட்ரிக் லிஞ்ச் என்பவன் பட்டாளத்தாரால் இரவில் வீட்டை விட்டு வெளியே கொண்டுபோகப்பட்டான். பின்னல், உடல் குண்டுகளால் சல்லடைக் கண்ணுகத் ل6Pr sgo/6ODL-lL/رائے துகாக்கப்பட்டுக் கிடந்தது. இக்கொலேயைச் செய்தவர் கள் சிப்பாய்களே. - கறுப்புக் கபிலருடன் துணைப் படை ஒன்றும் அமைக்கப்பட்டது. அதிலுள்ளவர்கள் அதிகச் சம்பளம் வாங்குபவர்கள். ஐரிஷ் தேசிய இயக்கத்தை அடியோடு கல்லியெறியும் முயற்சியில் அவர்கள் அரும்பாடு பட்ட னர். அவர்கள் யாவரும் பட்டாளத்திலிருந்து விலகிய அதிகாரிகள் என்று அரசாங்கம் கூறியது. அது முற்றி லும் உண்மையன் அறு. அவர்களிலும் கேடிகள் பலர் இருந்தனர். சாதாரணக் கறுப்புக் கபிலர் படையைக் காட்டிலும் அவர்கள் அதிகத் திறமை வாய்ந்திருந்தனர். ஏனெனில், அவர்கள் அதிகச் சாதுரியமும், சக்தியும், தைரியமும் உடையவர்கள். அவர்களும் பொதுவாகக் கறுப்புக் கபிலரைச் சேர்ந்தவராகவே ஜனங்கள் கருதி வந்தனர். ஜூன் மாதம் 17, 18, 19-ம் தேதிகளில் டெயில் ஐரா னின் கூட்டமொன்று பிளமிங் விடுதியில் நடைபெற்றது. சுமார் ஐம்பது அங்கத்தினர் விஜயம் செய்திருந்தனர். ஒவ்வோர் இலாகாவும் செய்துவந்த வேலைகளைக் குறித்து மந்திரிகள் சுருக்கமான அறிக்கைகள் சமர்ப்பித்தனர். சேனையைப் பற்றிப் பாதுகாப்பு மந்திரியான கதால் புருகா எடுத்துக் கூறின்ை. எந்த அங்கத்தினரும் மக் திரிகளின் அறிக்கைகளே எதிர்த்து ஒரு வார்த்தைகூடக் கூருமல், அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டனர். மை-12