பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 மைக்கேல் காவின்ஸ் காலின்ஸ் வரப்போகிற வருஷத்தில் ஏற்படக்கூடிய செல வினத்தைக் குறித்து ஒரு திட்டம் தயாரித்தான். அது வும், அவனுடைய வரவு செலவு கணக்கும் மிகத் தெளிவா யிருந்தன. அங்கத்தினர்களுக்கு விளக்கவேண்டிய விஷ யங்களே எல்லாம், அவன் மனப்பாடமாகவே வைத்திருந் ததுபோல், எடுத்துரைத்தான். ■ இக் கூட்டத்தில்தான் காலின்ஸ் முதன்முதல் தாங் களே வருமான வரி வசூலிக்க வேண்டும் என்று ஒரு தீர் மானம் கொண்டுவந்தான். அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வருமான வரியை டெயில் ஐரானுக்குச் செலுத் அதும்படி ஜனங்களுக்கு அறிவிக்கவேண்டும் என்றும், அரசாங்கம் அவர்களேத் தண்டிக்காதபடி டெயிலே அவர் களைப் பாதுகாக்கவேண்டும் என்றும் அவன் எடுத் அதுரைத்தான். சிலர் ஆட்சேபனைகள் கூறினர். காலின்ஸ், சகல கேள்விகளுக்கும் பொருத்தமாகப் பதில் கூறி, சில தனிப்பட்ட நபர்களேயே சர்க்கார் தண்டிக்க முடியும் என் அறும், நாடெங்கனும் வரி மறுப்பு கடக்கும்பொழுது அத ல்ை ஒன்றும்கெய்ய இயலாது என்றும் வற்பு அறுத்தின்ை. டெயில் ஐரானின் உத்தரவுப்படி ஜனங்கள் யாவரும் அரசாங்கத்திற்கு வருமான வரி செலுத்துவதை உடனே கி.அத்திக்கொண்டனர். அயர்லாந்து சுதந்திரமடைந்து சமாதான உடன்படிக்கை ஏற்படும்வரை இவ்வரி மறுக் கப்பட்டது. வரிமறுத்தவர்களில் பலர் ஸின் பின் இயக் கத்தைச் சேர்ந்தவர்களல்லர். ஆயினும், அவர்களும் மற்றவர்களோடு கலந்துகொண்டனர். ஆல்ை, வரி மறுத்தவர்கள் யாவரும் டெயிலுக்குத் தாங்கள் செலுத்த வேண்டிய தொகைகளேச் செலுத்தவில்லை; சிலர்தான் செலுத்தினர். சிலர் தேசிய அரசாங்கத்திற்குப் பெருங்