பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 மைக்கேல் காலின்ஸ் மூவர் காயமடைந்தனர். அவர்களுக்கு உதவியாக வேஅ. படைகளும் வந்து சேரவே, தொண்டர்கள் தப்பி ஒடிச் சென்ருர்கள். ஜெனரல் லூகாஸ், தொண்டர்களால் தாம். மிக்க கெளரவத்துடன் நடத்தப்பட்டதாகவும், தாம் சந்தித்த தொண்டர் படை அதிகாரி மிகுந்த கண்ணிய, முள்ள கனவான் என்றும் அறிவித்தார். லூகாலைத் தொண்டர்கள் நடத்திய பான்மையையும், அவர்களே அர சாங்கம் கடத்திய முறையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரு பக்கத்தாருடைய கண்ணியமும் நன்கு புலப்படும். அயர்லாந்தில். கறுப்புக் கபிலர் செய்த கொடுமை கள் வெகு தொலையிலுள்ள இந்தியாவுக்குக்கூட எட்டின. இந்தியாவில் பிரிட்டிஷ் பட்டாளங்களில் இருந்த ஐரிஷ். சிப்பாய்கள் பலர், தங்கள் தாய்காட்டில் கடந்த கோரங் களைக் கேள்வியுற்று, மனக்கொதிப்படைந்தனர். அவர் களில் கான்னட்டு ரேஞ்சர்கள்’ என்ற படையினரில் 350 சிப்பாய்கள் பஞ்சாபில் இருந்தபோது, அயர்லாந்தில் கடந்த கொடுமைகளை ஆட்சேபிப்பதற்காக வேலை செய்ய மறுத்தனர். அவர்களே ஆங்கிலேயர் அடக்கும் பொழுது குழப்பம் ஏற்பட்டது. அதில் அவர்களில் இருவர் கொல் லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். பின்னல், 62 சிப் பாய்கள் ராணுவச் சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப் பட்டனர். முதலில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 14 பேர்களில் 13 பேருக்கு ஜன்ம தண்டனையாக மாற்றப் பட்டது. ஜேம்ஸ் டாலி என்பவன் மட்டும் பீரங்கி வாயில் வைக்கப்பட்டான். இக்கொடுங் தண்டனேகள் எல்லாம் ஆங்கில அதிகாரிகளின் மனத் துணுக்கத்தையே காட் டின.