பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 மைக்கேல் காவினஸ் விட்டார் ஸின்பின் கட்சியிடம் அதுதாபம் இல்லாதவ ராயினும், அவனுக்கு வேண்டும் உதவிகளைச் செய்தனர். பின்னர் அவனத் தொண்டர்கள் மேட்டர் வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்றனர். #. H கரோலன் வீட்டைச் சூழ்ந்திருந்த சிப்பாய்கள், தாங் கள் தேடிவந்த வீரர்கள் தப்பித்துக்கொண்ட விஷ யத்தை அறிந்து, வெறிகொண்டு, கரோலனே நிறுத்தி வைத்துச் சுட்டனர். அவர் ஒரு பாவமும் அறியாதவர். படுகாயம் அடைந்த போதினும், அவர் உடனே உயிர் துறக்காமல், அன்று நடந்த அட்டுழியங்களே எல்லாம் உலகறிய எடுத்துச் சொல்லிய பின்னர் மடிந்தார். தான்பிரின் வைத்தியசாலையில் படுத்த படுக்கை யாய்க் கிடந்தபொழுது, டிரீஸி டப்ளின் நகரின் பல பாகங் களிலும் அலேந்து, மேல் நடக்கவேண்டிய காரியங்களைக் கவனித்துவந்தான். டப்ளினில் பீடார் கிளான்ஸி என்பவ அனுடைய ஜவுளிக் கடையில்தான் தொண்டர்கள் அடிக் கடி கூடிப் பேசுவது வழக்கம். அதை ஒற்றர்கள் கவ னித்து வந்தனர். ஒரு சமயம் டிரீஸி அங்கு புகுந்ததை ஒற்றர்கள் கண்டு அறிவித்ததால், பல சிப்பாய்கள் ஒரு லாறியில் ஏறி அங்கு வந்தனர். டிரீஸி அங்கிருந்து தப்புவதற்காகத் தன் சைக்கிளில் ஏறும்பொழுது, உளவு அதிகாரி ஒருவன் அவன் மேல் பாய்ந்தான். டிரீஸி அவனுடன் போராடி அவனேச் சுட்டான். அதற் குள் லாறியிலிருந்த ஒருவன் டிரீஸியைச் சுட்டு விட்டான். வேறு பலரும் அவனக் குறிவைத்துச் சுட்டனர். சிப் பாய்களுடைய குண்டுகளால் டிரீஸி உயிர் துறந்தான் , தெருவில் நின்றுகொண்டிருந்த ஜனங்களில் சிலரும்