பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறுப்புக் கபிலர்' 201 மடிந்தனர். ஒரு போலீஸ்காரனும் ஒரு பெண்ணும்கூட குண்டினல் இறந்து வீழ்ந்தனர். H டிரீஸியின் பிரேதம் இனம் கண்டுபிடிப்பதற்காக .டப்ளின் மாளிகைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. திப் பெரரியிலிருந்து ஸார்ஜன்டு ரோச் என்பவன் பிரே தத்தை அடையாளம் பாாப்பதற்காக வந்தான். அவன் அவ்வீரனின் உடலைக் கண்டு அநாவசியமாகவும் ஆபாச மாகவும் பல வசனங்களைக் கூறினன். எதிரி இறந்த பிறகும் அவனுடைய கோபம் தணிந்ததில்லே போலும் ! ஸார்ஜன்டு கூறிய வசை மொழிகளைக் கேட்டுக்கொண் டிருந்த ஒற்றன் ஒருவன் அவற்றைக் காலின்ஸ்-க்கு அறிவித்தான். மறுநாள், அந்த ஸார்ஜன்டு கப்பல் சாமான்கள் இறக்குமிடத்தில் கடந்துகொண்டிருந்த பொழுது சுட்டுக் கொல்லப்பட்டான். இவ்விஷயத்தில் டப்ளின் ஒற்றர்களும் தொண்டர்களுக்கு உதவி செய்த ώύ/ Τ. == ஒரு சமயம், கர்பியூ நேரத்திற்குப் பிறகு, ஜனங்கள் தெருக்களில் நடமாடாமல் சிப்பாய்கள் பாதுகாத்துவரும் வேளையில், ஒர் ஒற்றன் சுட்டுக் கொல்லப்பட்டான். உண் மையில் இக்கொலையைச் செய்து முடித்தவன் காலின் ஸின் நண்பனை ஒர் ஒற்றன்தான். சர்க்காரின் ஒற்றர் கள் சிலர் மூலமாகவே மற்ற ஒற்றர்களேயும் அதிகாரி களேயும் சுட்டுக் கொல்வதற்கும் காலின்ஸ் ஏற்பாடு செய் தான் என்பதிலிருந்து சர்க்கார் உள்வு இலாகாவின் பல ஹீனம் தெரிகின்றது. நாடெங்கும் நடந்த பயங்கர ஆட்சி ஜனங்களைக் கசக் கிப் பிழிந்தது. அவர்கள் திகைப்பும் வியப்புங் கொண்டு, எதை இழந்தும்,எவ்வகையாலும், கொடுங்கோலிலிருந்து