பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 மைக்கேல் காலின்ஸ் தப்புவதற்குத் அணிந்து நின்றனர். காலின்ஸின் தோழன் மக்கீ பறக்கும் தொண்டர் படை பலவற்றை கி.அவின்ை. அவைகள் பல இடங்களுக்கும் சென்று கொடுமை செய்யும் அதிகாரிகளேத் தண்டித்து வந்தன. தொண்டர்கள் எழுச்சித் தீயை மூட்டி வந்தனர். கறுப் புக் கபிலரும் அதிகாரிகளும் அதற்கு எண்ணெய் ஊற்றி வந்தனர்.

++++++++++++&&&&&&&&&&&&&&&&&&++++++++++ பழிக்குப் பழி

ஆங்கில அரசாங்கம், தன்னே மூச்சுத் திணறும்படி செய்துவந்த தொண்டர் படையின் முதுகெலும்பாக விளங்கியவன் காலின்ஸ் என்பதை, 1920-ம் வருஷ ஆரம் பம் முதலே அறிந்திருந்தது. எனவே, ஆங்கில ஒற்றர் களும் சிப்பாய்களும் அவனேப் பிடிக்கவோ கொல்லவோ வேண்டும் என்பதிலேயே கண்ணுங் கருத்துமா யிருந் தனர். காலின்ஸின் உருவம் அவர்களுக்கு நன்ருய்த் தெரியாது. அவனே அறிந்திருந்த பழைய போலீஸ் ஒற்றரிற் பலர் வேலையை விட்டு நீங்கியும், இறந்தும் மறைந்து விட்டனர். சிலர் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தெருக்களில் வெளியேருமல் மறைந்து வாழ்ந்தனர். காலின்ஸ் பல சமயங்களில் தெருக்களில் வைத்தே சிப்பாய்களால் பிடிக்கப்பட்டான். அவர்களைப் பார்த்து அவன் புன்னகை செய்ததும், அவர்களும்