பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,226 மைக்கேல் காலின்ஸ்

பொழுது, லாயிட் ஜார்ஜ், மீண்டும் அயர்லாந்துடன் போர் தொடுக்கப் போவ திாக அறிவித்தார். 'அமித வாதிகள் முதலில் அடக்கப்படவேண்டும் ' என்பது அவர் கூற்று. தென் அயர்லாந்தில் ராணுவச் சட்டத்தை அமல் நடத்தவேண்டும் என்று சர்க்கார் தீர்மானித்திருப் பதாக அவர் அறிவித்தார். மேலும், ஐரிஷ் தொண்டர் கள் தத்தம் ஆயுதங்களே அரசாங்கத்திடம் சமர்ப்பித்து விட வேண்டும் என்ருர். டெயில் ஐரான் அங்கத்தினர் சிலர் இங்கிலாந்துக்கு வந்து கலந்து பேச அதுமதிக்கப் படுவர் என்றும் கூறினர். - பிற்போக்காளர் சமா தானத்தை விரும்பி அனுப்பிய செய்திகளே அவர் படித் அதுக் காட்டினர். சிறிது காலத்திற்குப் பிறகு ராணுவச் சட்டம் அமலிலுள்ள பிரதேசத்தில் ஆயுதங்கள் வைத் திருப்பவர்களுக்கும், கலகக்காரருக்குத் தங்க இடங் கொடுத்து ஆதரிப்பவர்களுக்கும் மரண தண்டனே விதிக்கப்படும் என்றும் அவர் கூறினர். சமாதானத்தில் விருப்பங் கொண்டதாகப் பாவனே செய்த அதிகார வர்க் கம், தன் கோர தத்தங்களையும் பேழ் வாயையும் தெளி வாய்க் காட்டி, உஆறும ஆரம்பித்தது. முடியுமானல், சகல ஐரிஷ் வீரரையும் அப் பேழ்வாய் விழுங்கிவிடும் போலிருந்தது. லாயிட் ஜார்ஜ் எவருடன் சமரசம் பேசினலும், ஒரு கையால் எதிரியின் குடுமியையும் மற்ருெரு கையால் அவன் பாதத்தையும் பிடித்துக்கொள்வார் என்று காலின்ஸ் எண்ணி யிருந்தான். எனவே காலத்துக்கு மூப்பான சமாதானப் பேச்சு வெம்பி உ திர்ந்துவிடும் என்பது அவன் எண்ணம். லாயிட் ஜார்ஜின் பேச்சு