பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 ம்ைக்கேல் காலின்ஸ் == க o = - ཟ எதிர்த்து அவன் இரவு பகலாய்க் கடும் போர் புரிந் தானே, அங்காட்டின் ஹிருதயமான லண்டன் மாநகரின் நடுவே, அயர்லாந்தின் துரதனுக அவன் விளங்கியது. காலத்தின் மாறுதலைக் காட்டியது. இங்கு நாம் டெயில் ஐரான் மந்திரி சபையினுள்ளே புகைந்துவந்த குழப்ப மொன்றைக் குறிப்பிட வேண்டி யது அவசியம். கதால் புருகா காலின்ஸிடம் வெறுப் படைந்து, முன்னுல் ஆயுதங்கள் வாங்கிய வகையில் காலின்ஸ் பன விஷயத்தில் நம்பிக்கைக் குறைவாய் நடந்துகொண்டதாக எண்ணிஞன். ஆஸ்டின் ஸ்டாக் கும் காலின்ஸிடம் கொண்டிருந்த அன்பைத் துறந்தான். டிவேலரா நடுகிலேமை வகித்தார். அதனுல் அவருக்கும் காலின்ஸ்-க்கும் இடையில் பிளவு ஏற்படும்போல் தோன்றியது. இவ்வாறு சிறிதாகக் காணப்பட்ட புகை யின் நடுவே, பின்னல் தேசமெங்கும் பற்றி எரியக்கூடிய பெரு நெருப்பு மறைந்து கின்றுகொண்டிருந்தது. 표로 உடன்படிக்கை லண்டனில் காலின்ஸ் கடொகன் கார்டன்ஸில் தங்கியிருந்தான். ஐரிஷ் பிரதிநிதிகள் எவரும் ஆங்கி லேயர் நடத்தும் விருந்துகளிலும் கச்சேரிகளிலும் கலந்து கொள்ளக்கூடாது என்று அவர்களுக்குள் ஒரு தீர்மானம் செய்துகொண்டு, அதன்படி கடந்துவந்தனர். அவர்