பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 மைக்கேல் காலின்ஸ் இருபக்கத்தாரும் மேற்கொண்டு என்ன நடக்கப் போகிறது என்று எதிர் நோக்கி யிருந்தனர். அவர்கள் சந்தித்தது அதுவே முதன்முறை ஆகையால், ஒருவரை ஒருவர் உன்னிப்பாய்ப் பார்த்தவண்ணம் இருந்தனர். முக்கியமாக ஆங்கிலப் பிரதிநிதிகள் தாங்கள் வெகு காளாய்க் கேள்விப்பட்டிருந்த காலின்ஸின் முகத்தைக் கவனித்துப் பார்த்தனர். அறையில் அமைதி கிலவி யிருந்தது. லாயிட் ஜார்ஜ் மகாகாட்டை ஆரம்பித்து வைத்து ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினர். ஆர்தர் கிரி பித்தும் அதற்குத் தக்கபடி இனிமையாக மறுமொழி பகர்ந்தார். பிரதம மந்திரி பேசியபொழுது, டெயில் ஐரானேக் குறிப்பிடுகையில், உங்கள் பார்லிமெண்ட்’ என்றும், டெயில் மந்திரி சபையை உங்கள் அரசாங்கம்’ என்றும் அழைத்த வார்த்தைகளே ஐரிஷ் பிரதிநிதிகள் நன்கு கவ னித்தனர். இதே டெயில் ஐரானும் அதன் மந்திரி சபை யுமே சட்ட விரோதமான ஸ்தாபனங்களாகக் கருதப் பட்டு, சில மாதங்களுக்கு முன் அதன் அங்கத்தினர்கள் சிறை வைக்கப்பட்டனர். இப்பொழுது அவை பிரதம மந்திரியால் சம அந்தஸ்துடன் அழைக்கப்பட்டன : அரசியல் சூதாட்டத்தில் சமயத்துக்குத் தக்கபடி ராஜ தந்திரிகள் காய்களே உருட்டுவது இயற்கையே யன்ருே ! மகாநாடு தினந்தோறும் கூடி ஆலோசித்து வங் தது. கடற்படை, ராணுவம், வரவு செலவு முதலிய விஷ யங்களே இரு நாடுகள் சம்பந்தமாகவும் எப்படி முடிவு செய்ய வேண்டும் என்று விவாதங்கள் நடைபெற்றன. தாற்காலிக சமாதான உடன்படிக்கை சம்பந்தமாக எங் தப் பிரச்னைகளேத் தீர்ப்பதிலும் மிகுந்த நேரம் செல