பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 மைக்கேல் காலின்ஸ் = க மெண்டுக்குமுள்ள சம்பந்தம் கானடா கொண்டுள்ள சம்பக் தத்தைப் போலவே இருக்கும். 8. கானடாவுக்கு ராஜப் பிரதிநிதி கியமிக்கப்படுவ தைப் போலவே அயர்லாந்துக்கும் பிரதிநிதி நியமிக்கப் படுவார். 4. ஐரிஷ் பிரீஸ்டேட் பார்லிமெண்டின் அங்கத்தினர். ஒவ்வொருவரும், பிரிஸ்டேட் அரசியல் அமைப்புக்கு விசு வாசமா யிருப்பதோடு, மேன்மை தங்கிய ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கும், அவர் வாரிசுகளுக்கும், சட்ட பூர்வமாகப் பின் பட்டத்துக்கு வருபவர்களுக்கும் விசுவாசமா யிருப்ப தாகப் பிரமாணம் செய்யவேண்டும். 5. பிரிட்டிஷ் அரசாங்கமும் ஐரிஷ் அரசாங்கமும் ஒர் ஏற்பாடு செய்துகொண்டு, ஐரிஷ் பிரீஸ்டேட் பொறுப்பு ஏற்றுக்கொள்ளும் வரை, ஐரிஷ் கடற்கரையைப் பிரிட்டிஷ் படைகளே பாதுகாக்கவேண்டியது. 6. அயர்லாந்தின் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்படும் ராணுவம், இங்கிலாந்தின் ஜனத்தொகைக்கு அங்கு எவ் வளவு ராணுவம் இருக்கிறதோ, அதே விகிதப்படி அயர் லாக்கின் ஜனத்தொகைக்குத் தக்க அளவுக்கு மேற்படாத படி இருக்கவேண்டும். 7. ஆங்கிலக் கப்பல்கள் ஐரிஷ் துறைமுகங்களில் தங்குவதற்கும், ஐரிஷ் கப்பல்கள் ஆங்கிலத் துறைமுகங் களில் தங்குவதற்கும் உரிமையுண்டு. ஆனல் எல்லாக் கப்பல்களும் துறைமுகங்களில் கட்டவேண்டிய கட்டணங் களேச் செலுத்தவேண்டும். 8. வட அயர்லாந்தின் பார்லிமெண்டின் சம்மதமில் லாமல் தென் அயர்லாங்சின் பார்லிமெண்டு அதன் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாது.