பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதரர் பூசல் 263. மறுநாள் டெயில் கூடும்பொழுது காலின்ஸ் ஆர்தர் கிரிபித்தைத் தலைவராகப் பிரேரேபித்தான். அத் தீர் மானத்தை யொட்டி வாக்கெடுக்கும் சமயத்தில் டிவே லரா எழுந்திருந்து கிரிபித்தின் தேர்தலே ஆட்சேபித் தார் கிரிபித் சமாதான மகாநாட்டில் ஐரிஷ் பிரதிநிதி களின் தலைவரா யிருந்தமையால், அவர் அம் மகாகாட் டின் முடிவை நிறைவேற்றி வைக்கும் கடமை உடையவர் என்பதும், அதல்ை குடியரசைக் கவிழ்த்து அதன் ஸ்தானத்தில் வேருேர் அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பும் உடையவர் என்பதும், அவர் இடைக் காலத் தில் குடியரசை ஆதரிக்கவேண்டியிருக்க அதன் அழி வுக்கு வேண்டிய காரியங்களைச் செய்யவேண்டியிருக்கும் என்பதுமே அவருடைய ஆட்சேபத்துக்குரிய முக்கிய காரணங்கள். இக்காரணங்களேக் கூறிவிட்டு, அச்சம யத்தில் தாம் அங்கிருக்க முடியாது என்று டிவேலரா வெளியேறினர். உடன்படிக்கைக்கு எதிராக இருந்த வர் அனைவரும் அவரைப் பின்தொடர்ந்து வெளி யேறினர். காலின்ஸ் அச்சமயம் தன் ஆசனத்தைவிட்டு எழுந்து, இடி போன்ற குரலில், துரோகிகளே, செல் லுங்கள் ! தேசத்தைக் கைவிடுபவர்களே, செல்லுங்கள் ! நாங்கள் அவள் பக்கத்தில் கிற்போம் ! என்று கூவின்ை. எஞ்சியுள்ள அங்கத்தினர்கள் கிரிபித்தை ஏகமன தாகத் தலைமைப் பதவிக்குத் தேர்ந்தெடுத்தனர். கிரி பித் உடனே ஒரு புதிய மந்திரி சபையை அமைத்தார். அதை டெயில் ஐரானும் அங்கீகரித்தது. பிற்பகல் கூட்டத்தில் டிவேலராவும் அவருடன் வெளியேறிய அங்கத்தினரும் பிரசன்ன்மா யிருந்தனர். அப்பொழுது டிவ்ேலரா, கிரிபித் கையாளப் போகும்