பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழியாச் சுடர் 2.79. ஹாரி போலண்டு ஜூலை 31-ம்தேதி சர்க்கார் படை களால் கைதி செய்யப்பட்டான். அவன் தப்பியோட முயற்சிக்கையில், சிப்பாய்கள் அவனேச் சுட்டனர். அவன் மிகவும் காயமடைந்து, "மூன்று தினங்கள் கழிந்து மரண மடைந்தான். சொந்தச் சகோதரர்களோடு போராடுவது காலின் ஸ்-க்கு உவப்பான காரியமன்று. ஆல்ை வேறு வழியும் இல்லை. அவன் சர்க்கார் படையை வலிமைப்படுத்திப் புதிய முறையில் அமைத்தான். எத்தனேயோ அன்பங் களிடையிலும் அவனது மலர்ந்த முகம் வாடவில்லை: பழைய உற்சாகம் தணியவில்லை. போதுமான பாதுகாப் பின்றியே அவன் எங்கும் சாதாரணமாய்ச் சென்று வந்தான். அவனுடைய பழைய நண்பர்களும் புதிய பகைவர்களுமான எதிர்க்கட்சித் தலைவர்களும் அவனி டத்தில் கொண்டிருந்த மரியாதையைக் குறைக்கவில்லை என்பதிலேயே அவனுடைய உன்னத குணங்களேத் தெரிந்துகொள்ளலாம். இங்கிலயில் ஆகஸ்ட் 12-ம் தேதி பழம் பெரும் ஐரிஷ் தேசபக்தரான ஆர்தர் கிரிபித் 'திடீரென்று தேக வியோகமானர். அந்த அரும் பெரும் தலைவருடைய மரணம் காலின்ஸை வாட்டி வருத்தியது. நெருக்கடி யான சமயத்தில், இருள் சூழ்ந்த அயர்லாந்தில், கலங் கரை விளக்கம் போல் ஒளி காட்டித் தேசத்தை கல்வழி யில் செலுத்தக்கூடிய அப்பெருமானே இழந்த நஷ்டம் அளவிடற்கரியது என்று அவன் கனிந்துருகினன். கிரிபித்தின் பிரேத ஊர்வலம் அரசாங்கத்தாலேயே ஏற்பாடு செய்யப்பட்டது. அன்று டப்ளின் நகர் முழு வதும் வேலைநிறுத்தம் செய்யப்பட்டது. அனலிடைப்