பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 மைக்கேல் காவின்ஸ் டிரைவர்களும், பின்புறமுள்ள ஆசனத்தில் காலின்ஸ்- ம் ஜெனரல் டால்டனும் அமர்ந்திருந்தனர். அந்தக் காருக்குப் பின்னல் கவசம் பூண்ட கார் சென்றதது. ர ஸ்தாக்களில் பல சேதங்கள் ஏற்பட்டிருந்ததாலும், பல பாலங்கள் உடைக்கப்பட்டிருந்ததாலும், பிரயாணம் செய்வது கஷ்டமாயிருந்தது. குளோண்கில்டியிலிருந்து - மூன்று மைல்களுக்கு அப்பால் பெரிய மரக்கட்டைகள்ால் வழி அடைக்கப்பட்டிருந்தது. கட்டைகளே அப்புறப் படுத்த அரை மணி நேரமாயிற்று. காலின்ஸ் எந்த வேலையையும் எக்காலத்திலும் இழிவாகக் கருதுவது வழக்கமில்லே யாதலால், அவனும் கோடரியும் ரம்பமும் ஏந்தி, கட்டைகளே அறுத்து வெளியேற்ற உதவி செய்' தான். பின்னல் கார்கள் மீண்டும் புறப்பட்டன. குளோன கில்டியை அடைந்தபின், காலின்ஸ் அங்குள்ள படைத் தலைவனேயும் நண்பர்களேயும் கண்டு பேசிஞன். அது அவன் சொந்த நகர மாதலால், மிகுந்த உற்சாகத்துடன் நண்பர்கள் அவனுடன் கூடிக் குலாவினர். நகர மக்கள் அனேவரும் அவனே வரவேற்று உபசரித்தனர். - குள்ோனகில்டியிலிருந்து மூன்று மைல்களுக்கு அப் பாலுள்ள கிராமத்தில் காலின்ஸ் தன் சகோதரன் எமீனே யும் சந்தித்தான். இந்தச் சுற்றுப் பிரயாணத்தில் அவ. னுடைய உறவினர் பலரும் அவனேக் காணும் பேறு பெற்றனர். ஆல்ை, அதுவே அவனக் கடைசி முறை யாக அவர்கள் பார்த்ததாகும். - - வழியில் எல்லா நகரங்களிலும் காலின்ஸ் மிகுந்த உவகையுடன் வரவேற்று உபசரிக்கப்பட்டான். ரோஸ் கார்பெர்ரியில் பட்டாளத் தளகர்த்தருள் ஒருவன் அவனேக் கண்டு, அப்பகுதியில் எதிர்க்கட்சித்தொண்டர்கள் அதிக