பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

மைக்கேல் காலின்ஸ்


எதைப் பாதுகாக்க வேண்டியிருக்கின்றது ? மேலும், அது யாருக்கு விரோதமாய் நின்று பாதுகாக்கவேண்டும்? அது பாதுகாப்பதற்கு ஒரு சொந்த அரசியலமைப்பையோ அல்லது தேசீய அரசாங்கத்தையோ பெற்றிருக்கவில்லை என்பதை யாவரும் அறிவர். திரு. ரெட்மண்டு எந்த வல்லரசுக்குத் தேசிய அயர்லாந்தின் ஊழியர்களை அளிப்பதாய்க் கூறுகிறாரோ, அந்த வல்லரசால் அவை இரண்டும் (சொந்த அரசியலமைப்பும் தேசிய அரசாங்கமும்) அயர்லாந்திடமிருந்து பறிக்கப்பட்டிருக்கின்றன. தேசத்தின் சம்மதத்தைப் பெறாமலே ரெட்மண்டு வாக்களித்துவிட்டார் என்பதை எல்லோரும் அறிவர். எந்த ஐரோப்பிய வல்லரசும் அயர்லாந்தின்மேல் போர் தொடுக்கவில்லை. டப்ளின் மாளிகையில் இருந்து கொண்டு அயர்லாந்தின்மேல் ஆதிக்கம் செலுத்தும் ஆங்கிலேயர் பேரில் இரண்டு ஐரோப்பிய வல்லரசுகள் படையெடுத்திருக்கின்றன. தொண்டர்களை அயர்லாந்தைப் பாதுகாக்க அழைப்பதானது அம் மாளிகையிலேயே நிலேபெற்றிருக்கும் அதிகார வர்க்கத்தைப் பாதுகாக்கவே யாகும்......

'ஐரிஷ் தொண்டர்கள் அயர்லாந்தைப் பாதுகாக்க வேண்டுமானால், அவர்கள், அயர்லாந்துக்காக, அயர்லாந்தின் கொடியின் கீழ், ஐரிஷ் தளகர்த்தர்களின் உத்தரவின்படி, பாதுகாக்க வேண்டும். இல்லாவிடில் அவர்கள் தங்கள் தேசத்தின் அடிமைத்தனத்தை நிலைபெறச் செய்தவர்களாவார்கள்.'

ஆங்கில ராஜதந்திரிகள் தங்கள் தந்திரம் முழுவதையும் காட்டி அயர்லாந்தைத் திருப்திப்படுத்த முன்வந்தனர். கருவிலேயே சிதைந்துபோன குழந்தையைப் போன்ற ஒரு சுயாட்சி. மசோதாவை அவர்கள் பார்லி-