பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மைக்கேல் காலின்ஸ்


64 மைக்கேல் காலின்ஸ்

=

கூட்டத்தார் தீர்மானித்தனர். அச்சமயம் வடக்கு ரோஸ் காமன் தொகுதிக்குரிய பார்லிமெண்டு அங்கத்தினர் ஸ்தானத்திற்குத் தேர்தல் நடைபெற விருந்தது. பிளங் கெட் அந்த ஸ்தானத்துக்கு அபேட்சகராக நிறுத்தப் பட்டார். தொண்டர்கள் தீவிரமாய் உழைத்து வந்தனர். உணர்ச்சி ததும்பும் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. நீங்கள் ஏன் கவுண்ட் பிளங்கெட்டை ஆதரிக்க வேண் டும் ? ஏனென்ருல், உங்களுடைய மக்களும், ஒவ்வொரு ஐரிஷ் தந்தையின் மகனும் உயிர்த்தியாகம் செய்ய வேண்டியதற்குப் பதிலாக, அவர் தம்முடைய மூன்.அறு குமாரர்களேயும் தியாகம் செய்திருக்கிரு.ர்......... அவரை, டப்ளின் சங்கம் செய்ததுபோல் நீங்களும், வடக்கு ரோஸ் காமனில் அவமானப்படுத்தி, அவர் உங்களுக்குத் தேவை. யானவரல்லர் என்று ஆங்கில அரசாங்கத்திற்குக் கூட அறு விர்களோ ? இல்லை வடக்கு ரோஸ்காமனில் இன்னும் ஐரிஷ் காரர்கள் இருக்கிருர்கள்! இவ்வாறெல்லாம் அவ்வறிக்கைகள் கூறின. முடிவில் பிளங்கெட்டே அபரிமிதமான வெற்றியடைந்தார். வெற்றிக்குப் பின், அக்கிழவர் தாம் இங்கிலீஷ் பார்லிமெண்டுக்குச் சென்று விற்றிருக்க விரும்பவில்லை என்று அறிவித்துவிட்டார். இதல்ை அவர் அடைந்த வெற்றி அதிகப் பிரகாசமடைந்தது. தேர்தலுக்குப் பின் காலின்ஸ் ஐரிஸ் தேசிய உத விச் சங்கத்தின் காரியதரிசியான்ை. சங்கத்தில் முன் னிருந்த குறைகளேயெல்லாம் நிவர்த்தி செய்தான். இவ்வேலையில்ை அவன் பல அரிய ஊழியர்களின் நெருங்கிய நட்பைப் பெற்று வந்தான். அச்சமயம் அமெரிக்க ஐக்கிய மாகாணம் யுத்தத்தில் இறங்கிய செய்தி அயர்லாந்துக்கு எட்டியது. இங்கி