பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாமும் ஆங்கிலேயரும் அண்டை வீட்டுக்காரர்கள். ஆயினும், அவர்கள் நமது வீட்டில் குடி புக ஒருநாளும் சம்மதிக்க மாட்டோம்.

ந்தியா, எகிப்து, அல்லது எந்த நாடாயினும் சரி—ஒரு சமூகத்தை அடக்கியாள வேண்டுமானால், அந்தச் சமூகத்தில் சிலர் அந்நியனுக்கு உதவிசெய்து தம் சகோதரர்களை அடிமைப்படுத்த முன்வந்தால்தான் சாத்தியமாகும்.

யர்லாந்தின் நிலைமையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள், அது பிரிட்டிஷ் தீவுகளில் ஒன்றன்று என்பதை முதலாவது அறிந்துகொள்ள வேண்டும்.

ங்கிலேயர் எவனைக் கலகக்காரன் என்று அழைக் கின்றனரோ அவனே உண்மையான ஐரிஷ்காரன்.

யர்லாந்துக்குப் பூரண சுதந்திரம் வேண்டும் என்று சொல்லாதவர்கள் ஆங்கில அதிகாரிகளே.

பிரிட்டிஷார் நம்மைத் தங்கள் சிறைகளிலே தள்ளட்டும்; நமது உள்ளத்தை மட்டும் அவர்களால் அடைக்க முடியாது. நமது மானிட உள்ளம் எழுந்து நின்று, டெரென்ஸ் மாக்ஸ்வினி கர்ஜித்தது போல், “முடியாது ! நாங்கள் அடிமைப் பிரஜைகளாக இருக்க முடியாது!” என்று பிரிட்டிஷ் பிரதமமந்திரி லாயிட் ஜார்ஜிடத்தில் சொல்லும்.'

—டி'வேலரா