பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெயில் ஐரான் 81 தரிசிகள் இருவரும் கைதிசெய்யப்பட்டதால், போலண்டு அவர்களுடைய வேலைகளேயும் பார்த்துவந்தான். தலைவர்கள் இல்லாத குறையை இவ்வாலிபர்கள் நன் குனர்ந்து பன்மடங்கு ஊக்கத்துடன் வேலைசெய்து வந்தனர். கதால் புருகா கட்டாய ராணுவச் சட்டத்தை எதிர்த்துத் தக்க ஏற்பாடுகள் செய்வதற்காக ரகசியமாக இங்கிலாந்து சென்ருன். அவனுடைய ஸ்தானத்தில் டிக் முல்காஹி தொண்டர் படைத் தலைமையை மேற் கொண்டான். எங்கனும் கோரமான புதுச் சட்டத்தை எதிர்க்க மும்முரமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொண்டர் படைத் தலைமைக் காரியாலயத்தில் காலின்ஸ்-க்குத் தலைக்குமேல் வேலைகள் குவிந்து கொண்டே யிருந்தன. அவன் படை கிர்மாண அதி காரி. அத்துடன் உதவித் தளகர்த்தகைவும் இருந் தான். உண்மையில் பொதுக் காரியதரிசியின் வேலே அனேத்தையும் அவனே பார்த்துவந்தான். ஏனென் ருல், பழைய காரியதரிசி சிறையிலிருந்தான். தொண்டர் களிடையே இடைவிடாத பிரசாரஞ் செய்யவும், வரப் போகும் போராட்டத்தைப் பற்றி விவரமாக அறிவிக்க வும், அவர்களேப் பக்குவப்படுத்தவும், அன் டோக்லக்' என்ற ரகசியப் பத்திரிகை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. பீஸ்லெய் ஆசிரியர் பதவியை ஏற்றுக் கொண்டான். அப்பத்திரிகை நான்கு பக்கங்களே யுடையதாயினும் , அனலையும் ஆவேசத்தையும் குழைத்து ஐரிஷ் வாலி பர்களுக்கு ஊட்டிவந்தது. தொண்டர்களேப்பற்றி அதன் முதல் தலையங்கத்தில் பின்வருமாறு எழுதப்பட் டிருந்தது : தொண்டர்கள் ராஜீயவாதிகள் அல்லர். அணிவகுத்துச் செல்லல், விளம்பரக் காட்சிகளில் மை-6