பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 மைக்கேல் காவின்ஸ் = Fo என்று கூறிவிட்டது. மறுபக்கத்திலே, அடக்குமுறை, மட்டுக்கு மிஞ்சிய அடக்குமுறை, மேலும் மேலும் எல்லே யற்ற அடக்குமுறை-இதைத் தவிர வேருென்றும் அறியாத அரசாங்கம், திகைப்படைந்து, அழல் கொண்டு எரியப் பார்த்துப் பெருமூச்சு விட்டது : 7. - 초윤초로 표로운 윤표로 윤윤 윤윤 윤 윤 윤 윤 윤효 மீட்சிப் படலம் ஜெர்மனியுடன் சதியாலோசனை செய்ததாகப் பொய்க் குற்றம் சாட்டப் பெற்று ஆங்கிலச் சிறைகளிலே வாடிக்கொண்டிருந்த ஐரிஷ் தேசபக்தர்கள், போர் முடிவுற்றதால் விரைவில் விடுதலே வருமென்று எதிர் பார்த்திருந்தனர். ஆல்ை, ஐரோப்பா யுத்தம் முடிந்த போதிலும், இங்கிலாந்துக்கும் அவர்களுக்கும் ஏற்பட்ட யுத்தம் மட்டும் முடியவில்லை என்பதை அவர்கள். நன்கு உணரவில்லை. நாட்களும் மாதங்களும் கழிந்தன. கிறிஸ்துமஸ் பண்டிகையும் வந்தது. ஆயினும், விடுதலை உத்தரவு மட்டும் வரவில்லை. அரசாங்கம் விடுதலை செய்யாவிடின், நம்மை நாமே விடுதலை செய்து கொள் வோம் ! என்று கைதிகள் முடிவு செய்தனர். டிவேலரா முதலியோர் லிங்கன் சிறையில் அடைக் கப்பட்டிருந்தனர். டெயில் ஐரான் அங்கத்தினர் பலரும் அங்குதான் இருந்தனர். லிங்கன் சிறை மற்ற சிறை களேப்போல் இல்லாமல் புது மாதிரியா யிருந்தது. பிர