பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய நிலை

13

போன இந்திக் கல்வி, மீண்டும், 1948-ல் ஓமர்ந்தூ ரார் மந்திரி சபையால் தொடர்ந்து அமுலுக்குக் கொண்டுவரப்படுகிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, மந்திரி சபையின் அரசியல் பலம் வளர்ந்த நிலையில், இந்தி வருகிறது.

ஆனால் 1938-ல் விடப்பட்ட நிலையில் இன்று தமிழ் நாடு இல்லை. அன்றிருந்ததைவிட தமிழன், திராவிடன் என்ற உணர்ச்சியும், தாய் மொழிப் பற்றும் தமிழர்களிடையே வளர்ந்திருக்கின்றன. அத்துடன் வடநாட்டு எதிர்ப்புணர்ச்சியும் பரவி யிருக்கிறது. இந்தியின் வரவு சாதாரண மொழிப் பிரச்சினையாக மட்டுமல்லாமல், தமிழர்களிடையே வழங்கிவரும் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் குலைக்கும் முயற்சியாகவும் இருக்கிறது என இந்தி எதிர்ப்பு இயக்கத்தினர் கருதுகின்றனர். எதிர்ப்பு முன்னிலையில் அன்று தலைமை தாங்கிய பெரியார் ஈ. வெ. ராமசாமி, அறிஞர் சி. என். அண்ணாத்துரை இவர்க ளுடன் இன்றைய எதிர்ப்பு முன்னணி நின்றுவிட வில்லை. அன்று ஒதுங்கி நின்ற தமிழறிஞர் திரு.வி.க. அவர்கள் எதிர்ப்பியக்கத்தில் இன்று இரண்டறக் கலந்து விட்டார். எதிர்ப்பு அரசியல் எதிர்க் கட் சிகளிடமிருந்து மட்டும் வரவில்லை. காங்கிரஸ் கட்சி யிலிருந்தே எதிர்ப்புக் குரல்கள் கேட்கப்படுகின் றன. தோழர்கள் ம. பொ. சிவஞானம், நாரண துரைக் கண்ணன் போன்ற பலரும் இந்தியின் நுழைவை எதிர்க்கின்றனர். தமிழறிஞர்களான மறைமலையடி கள், ச. சோ. பாரதியார், கா. அப்பாத்துரையார், போன்ற பலரும் இந்தியை எதிர்க்கின்றனர். சென்னையில்