பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மொழிப் போராட்டம்

ளுள்ளந்தோறும் கொளுத்தப்பட்டது. விடுதலைக் காகப் பாடுபட முனைந்த காங்கிரஸ், அந்த அள வோடு தன் கடமையைச் செய்ய முற்பட்டிருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் தலையிட் டிருக்க வேண்டாத-கூடாத பல பிரச்சினைகளி லும் தலையிட்டார்கள். அதில் ஒன்றுதான் தேசிய மொழிப்பிரச்சினை.

காங்கிரஸ் தலைவர்கள் சுதந்திரமாக வாழும் பல நாடுகளைப் பார்க்கும்பொழுது, அந்தந்த நாட் டில் தேசிய மொழி யொன்று முதலிடம் பெற்று விளங்குவதைக் கண்டனர். எனவே விடுதலைக் காகப் போராடும் இந்தியாவுக்கும் தேசிய மொழி யொன்று தேவை என நினைந்து இந்தி-பின் இந் துஸ்தானி தேசிய மொழியாக வேண்டுமென முடிவு செய்தனர்.

நாடு விடுதலை பெற்றதும் அதனுடைய மொழிக்கு முதலிடம் கொடுப்பது தவறா? அடிமைப் பட்ட நாடு சுதந்திர நாடானதும், சுதந்திர நாட்டுக் குரிய உரிமைகளோடு அது வாழ வேண்டாமா ? சுதந்திர நாடு என்பதன் அடையாளமாகத் தேசிய மொழி வளர்வதை ஏன் தடை செய்யவேண்டும்? என்று இந்தி மொழி ஆதரிப்பாளர்கள் கேட்க முனைவார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளும், கூறும் காரணங்களும் சரியானவைதாம். ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பின் ஏன் எதிர்ப்பு, தகராறு? என்று கேட்கத் தோன்றும்.

தேசியம், சுதந்திரம், மொழி இவைகளை அடிப் படையாக வைத்து அவர்கள் காட்டும் காரணங