பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசிய மொழியா ? பொது மொழியா? 27

களை நாம் மறுக்கவில்லை. ஆனால் அவற்றை இங் தியாவோடு தொடர்புபடுத்தி, இந்திதான் தேசிய மொழி எனக் கட்டாயப்படுத்தும்போதுதான், அடிப்படைக்

காரணங்களையே ஆட்டிவைக்கும்

அளவுக்கு முரண்பாடு தோன்றுகிறது. தேசிய மொழி தேவை என்று எங்கிருந்து ஆரம்பிக்கப் படுகிறதோ அந்த அடிப்படைக் கட்டத்திலேயே கேள்வி எழுகிறது. இந்தியா ஒரு தேசமா (Nation) ? கேள்வி சற்றுக் கசப்பானதுதான் - தேசம், தேசீ யம், தேசியமொழி என்று கனத்த குரலில் பேசிய பிறகு, விவாதத்தின் அடிப்படைக்கே ஆபத்தைத் தரும் கேள்வி!

இந்தியா ஒரு தன்மை கொண்ட ஒரு நாடல்ல ; பல்வேறு மொழி பேசும் வகுப்பினரையும், மாறு பட்ட கலாச்சாரங்களையும், வேறுபட்ட பழக்க வழக்கங்களையும் கொண்டிருக்கிறது. 'வரலாற்று முறைப்படி பார்த்தாலும், இனப் பாகுபாடுகளை நோக்கினாலும், கலாச்சார அளவு கோலை வைத் துக் கவனித்தாலும், மொழி வேற்றுமைகளை நினைத்தாலும், நிலப்பரப்பைக் கண்ணுற்றாலும்,

ஆங்காங்குள்ள பழக்க வழக்கங்களைக் கண்டாலும் இந்தியா ஒரே தேசமல்ல; ஒன்றுபட்ட இனத்தைக் கொண்டதல்ல; ஒரே கலாச்சாரத்தை யுடையதல்ல; ஒரு பெருந் துணைக்கண்டம் என்பது பெறப்படும். நிலப்பரப்பில் ரஷ்யா தவிர்த்த ஐரோப்பா கண்டத் திற்குச் சமம். ஆனால் வரலாறு, கலாச்சாரம், மொழி, பழக்கவழக்கம் ஆகியவற்றைப் பார்த்தால் ரஷ்யா உள்ளிட்ட ஐரோப்பாவையும் இந்தியா