பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

தேசிய மொழியா ? பொது மொழியா ? தேவை என்பதை வலியுறுத்தி காந்தியார் எ ழு திய கட்டுரை ஒன்றில் காணப்படுவதாவது:-

று

"இந்திய கலாச்சாரம் செய்யப்படும் நிலையி லிருக்கிறது.ஒன்றோடொன்று மோதிக்கொண் டிருக்கும் கலாச்சாரங்களை ஒன்று கலந்த ஒரே கலாச்சாரமாக்க நாம் முயலுகிறோம்" என்பதாகும். இந்தியாவில் பல திறப்பட்ட கலாச் சாரங்கள் இருக்கின்றன என்பதுமட்டுமல்ல, அவை கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வனவாக இருக்கின் றன என்தையும்காந்தியார் ஒப்புக்கொள் கிறார். இல்வாறு ஒன்று சேர்க்கும் வாய்ப்பைப் பொதுமொழியின் மூலம் அடைய அவர் எண்ணு கிறார் என்பது கட்டுரையின் மூலம் அறியப்படுகிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்தியா முழுமையும் ஒன்றாகத்திரட்டி, ஒரே தேசமாக இந்தியாவை நிலை நாட்ட காந்தியார் விரும்பினார். கடைசி

ளு

சில

ஆண்டுகள் வரை அந்த நினைவில் தடுமாற்றம் ஏற் படவில்லை. இந்தியா முழுவதையும் ஒன்றாகச் சேர்த்து அடிமைத் தளையை அகற்றும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டது. போராட்டம் நடத்தவும், இந்தியா முழுமையும் ஒன்றுபடுத்திப் பொதுவான எதிர்ப்பு முன்னணி அமைக்கவும், வெள்ளையராட்சி நீங்கினால் இந்தியா முழுமைக்கும் ஒரே அரசாங் கத்தை அமைத்து ஆட்சி புரியவும் பொது மொழி ஒன்று வேண்டும் என்ற கொள்கை வலியுறுத்தப் பட்டது. பொதுமொழி ஒன்று தேவை என்ற பேச்சு பிறந்ததும், பொதுமொழி யாவதற்குரிய மொழி எது என்ற பிரச்சினை எழுந்தது. இந்தி,