பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தி - உருது இந்துஸ்தானி

அது

நின்றுவிட்டது.

31

கற்றறிந்தோர்களால் மட் டுமே கையாளப்படும் நிலைபிலிருந்ததே யொழிய அன்றாட நடைமுறை வாழ்க்கைக்குப் பயன் படு வதா யிருந்ததில்லை. ஆரியர் வடஇந்தியா முழுமை யும் பரவியபொழுது அவர்கள் பேச்சுவழக்கில் இருந்துவந்த பிராகிருதத்தின் சொற்கள் இடத் திற்கு இடம் வேறுபட்டு வழங்கிவரத் தொடங்கின. திராவிடக் குழுமொழிகளோடு அவை கலக்க இலக் பேச்சு கிய இலக்கண வளமற்ற மொழிகள் பல வழக்கில் மட்டும் நின்று நிலவி வரலாயின. அவை களில் நூல் வழக்கு ஏற்பட உதவியாக இருந்தது கற்றறிந்தோர்களால் செம்மைபடுத்தி வரப்பட்ட சமஸ்கிருதமாகும். எனவேதான் சமஸ்கிருதத்தின் சாயல் வடஇந்திய மொழிகள் அனைத்திலும் காணப் படுகிறது. வட இந்தியாவின் சிதைவு மொழிகள் பலவும் சமஸ்கிருதச் சொற்களை மிகுதியாகக் கொண்டிருந்த போதிலும், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் திட்டுத் திட்டாகச் சிதறிக் கிடந்தமையால் அடிப்படைச் சொற்கள்கூடத் திரிந்தும், மாறுபட்டும் வழங்க வழங்க ஆரம்பித்தன. மேலும் இம் மொழிகள் பெரும்பாலும் பேச்சு வழக் கில் மட்டும் இருந்ததால் மொழியைக் கட்டுப்படுத் தும் இலக்கிய இலக்கண நூல் வழக்கு இன்றி வேகமாக மாறுபட்டுக்கொண் டிருந்தன.

று

பிராமண மதத்தை எதிர்த்து புத்தமதம் எழுந் ததும், புத்தமதக் கொள்கைகளும், கோட்பாடு களும் எழுதப்பட்டிருந்த பாலிமொழி வளர ஆரம் பித்தது. முதன் முதலாக வட இந்தியாவில் பாலி