பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மொழிப் போராட்டம்

மொழி பேச்சு வழக்கின் மூலமும் ஏட்டு வழக்கின் மூலமும் எங்கணும் பயிலப்பட்டது. அசோகன் காலத்தில் புத்தமதம் உயர் நிலையை அடைந்ததும், பாலி மொழியும் அதன் அதன் வளர்ச்சியின் உச்ச நிலையை அடைந்தது. அசோகன் கல்வெட்டுக்கள் பலவும் பாலிமொழியிலேயே எழுதப்பட்டன. கி. மு. 3-வது நூற்றாண்டிலிருந்து கி. பி. 6வது நூற் றாண்டு வரை ஏறத்தாழ ஒன்பது நூற்றாண்டுகள் பாலிமொழி சிறப்புற்று விளங்கியது. புத்த சமயம் தாழ்ந்து பிராமணமதம் ஆதிக்கம் பெறத் தொடங் கியதும், பாலிமொழியின் ஆட்சி குன்ற, அரசாங் கத்தின் ஆரதவு பிராமண மதத்தைச் சார்ந்த சமஸ்கிருதத்திற்குத் தரப்பட்டது. சமஸ்கிருதத் தின் நூல் வழக்கு உயர்ந்த போதிலும், பாலி மொழி வகித்துவந்த இடத்தை சமஸ்கிருதத்தால் நிரப்ப முடியவில்லை. ஏனெனில் முன்னர் கூறப் பட்டபடி சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இயங்காத மொழியாகி விட்டது. எனவே ஆங்காங் கிருந்த சிதைந்த மொழிகளே பழையபடி வழங்கின.

டது;

வட இந்தியாவின் மொழி வரலாறு வெளிநாட் டுப் படை யெடுப்புகளினால் பெரிதும் பாதிக்கப்பட் அதனால் மாறியது. மாறியது. முதன் முறையாக கி.பி. எட்டாவது நூற்றாண்டில் அராபியர் குஜ ராத் பகுதியின்மீது படையெடுத்தனர். அதற்குப் பின் முகம்மது கஜினி காலம்வரை குறிப்பிடத் தகுந்த படையெடுப்புகள் எதுவும் கிடையா. கஜினி காலத்தில் தான் அயல்நாட்டுப் படையெடுப்புகள் அதிகரித்தன. கஜினி மட்டும் பதினேழு தடவை