பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தி

து

33

கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்துள் ளான். கஜினிக்குப் பின் திரும்பத் திரும்பப் படை யெடுத்து இந்தியாவிற்குள் வருவது என்பது போய், இந்தியாவிலிருந்தே ஆட்சி புரிவது என்ற நிலைக்கு வந்தனர். அதற்குப் பிறகுதான் கோரி, அய்பக் கில்ஜி, சையத், ஆப்கன் போன்ற பல அரச பரம் பரைகள் வட இந்தியாவில் தொடர்ந்து ஆண்டன. இந்த அரசர்களுடன் வந்த துருக்கி, அரபி, பார சீகப் போர் வீரர்கள் டில்லி நகரைச் சுற்றிலும், மதுரா போன்ற பகுதிகளிலும் தங்கி, பின் வட இந்தியா முழுதும் ஆட்சி விரிவடைய விரிவடைய இவர்களும் பரவினர். அவர்கள் பேசிய துருக்கி, அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளின் சொற்கள் அவர்கள் தங்கிய இடங்களில் வழங்க ஆரம்பித் தன. அந்தச் சொற்கள் ஆங்காங்கு நிலவிய மொழிகளுடன் கலந்து புதுமொழிகள் தோன்றின. குறிப்பாக டில்லி மதுரா என்ற பகுதிகளில் வழங்கிய சிதைந்த மொழியுடன் அந்தப் பகுதிகளில் தங்கிய முகம்மதிய போர் வீரர்கள் பேசிய அரபி, பாரசீகச் சொற்கள் கலந்து உருது மொழி உண்டாயிற்று. துருக்கி மொழியில் உருது என்றால் துருப்பு, படை, பாடிவீடு என்று பொருள். அதாவது உருதுமொழி துருப்பு, படைவீடு, பாசறைகளில் வழங்கிய மொழி என்று பெயர்.)

இந்தி

இந்தி அல்லது இந்த்வி என்ற சொல் ஒரு தனிப்பட்ட மொழியின் பெயரல்ல என்பதை எல் லோரும் அறிந்துகொள்ள வேண்டும். முகம்மதிய

3

1