பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மொழிப் போராட்டம்

படை யெடுப்புக்கள் வட இந்தியாவிற்குள் புகுந்த தும், வெளிநாட்டு மொழிகள் வட இந்தியாவில் நுழைந்தன. (வெளிநாட்டு மொழிகளினின்றும் வடஇந்திய மொழிகளைப் பிரித்துக் காட்டுவதற்காக வட இந்திய மொழிக ளனைத்திற்கும் தரப்பட்ட பெயர் இந்தி அல்லது இந்த்வி என்பதாகும்.) அயல் மொழிகள், அயல் மொழிகளல் லாதவை என்ற பிரிவில், தமக்குள் எவ்வளவோ மாறுபட்டிருந்த போதிலும் வட இந்திய மொழிகள் அனைத்தும் இரண்டாவது பிரிவில் சேர்க்கப்பட்டு இந்தி அல்லது இந்த்வி என்ற பெயரால் அழைக்கப் பட்டன. எடுத்துக்காட்டாக, தென்னாட்டுக்கு, போர்த்துக்கேசியர், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக் காரர்கள், ஆங்கிலேயர்கள் போன்ற பல பிரிவி னர் வந்தபோதிலும், அவர்களனைவரும் ஐரோப்பி யர் என்றோ பரங்கிகள் என்றோ ஒரே பொதுப் பெயரால் அழைக்கப்பட்டது போல, இந்தி' என்ற சொல் வட இந்திய மொழிகள் அனைத்துக்கும் பொதுப் பெயராகத் தரப்பட்டது.

இந்தி என்று பொதுப் பெயரில் கூறப்பட்ட இந்த வட இந்திய மொழிகள் கீழ் நாட்டு இந்தி, மேல் நாட்டு இந்தி என இரு பெரும்பிரிவில் அடங் கும். இவற்றில் அடங்கும் முக்கிய மொழிகளாவன (1) பந்தேவி (Bundali), (2) கனோஜ் (Kanauji) (3) பிரஜ் பாஷா (Braj Bhasa), (4) பங்காரு (Bun- garu), (5) காரிபோலி (Khari Boli), (6) அவதி (Avadhi), (7) பகேலி (Bagheli), (8) சாட்டிஸ்காரி (Chhattis garhi). சில மொழியாசிரியர்கள் இந்த எட்டுடன் (1) ராஜஸ்தானி (Rajasthani), (2) மககி