பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தி

35

(Magahi) என்ற இரண்டு மொழிகளையும் சேர்த்து பத்து முக்கிய மொழிகளாக எண்ணுகிறார்கள். ஆசிரியர் மறைமலையடிகள் தம் "இந்தி பொது மொழியா?” என்ற நூலில் மேல் நாட்டு இந்தி, கீழ் நாட்டு இந்தி இரண்டுடன் மைதிலி, போஜ்புரி, மககி என்ற மூன்றையும்கொண்ட பிகாரி என்ற குழுவையும் அமைத்து மூன்று பெரும் பிரிவு களாக வகுத்துள்ளார். இந்த முக்கிய மொழிகளை யல்லாமல் சிந்தி, லந்தி, பஞ்சாபி, குஜராத்தி ருமேனி, கடுவாலி, நேபாலி, உரியா, பங்காளி, மராட்டி, காஷ்மீரி, கோஸ்தானி, திராகி, பஷை, கலாஷா, கவர்பாபு போன்ற பல மொழிகள் வட இந்தியாவில் இருப்பதை அவர் குறிப்பிடுகிறார். இந்த மொழிகளனைத்தும் ஏற்கனவே வழங்கிவந்த சிதைவு மொழிகளுடன் அரபி, பாரசீகச் சொற் கள் கலந்து உருப்பெற்றவையாகும். மேற் குறிப் பிட்டவற்றுள் பிரஜ்பாஷா என்பதே மொழியின் அடிப்படையாகும்.)

உருது

கி.பி. 13வது நூற்றாண்டில்தான் ராஜஸ்தானி வட இந்தியாவில் வளரத் தொடங்கியது. அது சில நூற்றாண்டுகள் கழித்து, பேச்சு வழக்கில்லா மல் நின்றுவிட்டது.

15-வது நூற்றாண்டில் வட இந்தியாவில் உண் டான பக்தி மார்க்கம் வட இந்திய மொழிகளில் இலக்கியத்தை உண்டாக்கியது.

தில்

முக்கியமானவை மூன்று

(2) கிருஷ்ண பக்தி (3) ராம் பக்தி.

பக்தி மார்க்கத்

(1) நிரகர் பக்தி