பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மொழிப் போராட்டம்

கபீர்தாசர், நானக், தாது என்பவர்கள் நிரகர் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர் களது பாடல்களும், எழுத்தும் காரிபோலி என்ற மொழியில் இருக்கிறது. இந்தக் காரிபோலி என்ற மொழி, பின் மொழிப் பிரச்சினை வளர்ந்த சமயத் தில் இந்துஸ்தானியுடன் ஒற்றுமைப்படுத்திக் காட் டப்பட்டது.

இரண்டாவதாகக் கூறப்பட்ட கிருஷ்ண பக்தி யைச் சேர்ந்த சுரதாசர், நந்த்தாஸ் முதலியவர் களின் பாடல்கள் பிரஜ் பாஷையில் கின்றன.

இருக்

துளசிதாஸ் எழுதிய ராமாயணம் அவதி மொழி யிலுள்ளது. அவர் ராம் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்.)

இந்த மூன்று பக்தி மார்க்கங்களும் மூன்று மொழிகளில் இலக்கியத்தை உண்டாக்கியதும், அந்த இலக்கியங்களும் துதிப்பாடல்களாக அமைந் ததும் குறிப்பிடத்தக்கனவாகும். எனவே அந்த மொழிகளில் இலக்கியங்கள் என்று சொல்லத்தக் கவை நாலைந்து நூற்றாண்டுகளுக்குட்பட்ட பக்திப் பாடல்களேயாகும். இந்த மொழிகளில் இந்துக்கள் மட்டுமல்ல, பின் முகம்மதிய கவிகளும் தோன்றி சில இலக்கியங்களை உண்டாக்கியிருக்கிறார்கள்.

(மொகலாயர் ஆட்சிகாலத்தில் உருதுமொழி இலக்கியம் வளர்ந்தது. வட இந்தியாவில் உருது மொழி அக்காலத்தில்தான் பரவ ஆரம்பித்தது. இந்துக்கள், முஸ்லீம்கள் இருபாலரும் வழங்கும் மொழியாக அது இருந்து வந்தது. பத்தொன்ப