பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தி

37

தாம் நூற்றாண்டு வரை அதற்கு எத்தகைய எதிர்ப் பும் இல்லையென்று கூறலாம்.

உருது எல்லோராலும் பேசப்பட்ட போதிலும் முஸ்லீம் சார்பான மொழி என்ற எண்ணத்தின் மீது இந்துக்களுக்குத் தனியான மொழியொன்று தேவை என்ற முயற்சி எழுந்தது. இது 19-வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் எனலாம். கல்கத்தா வில் இருந்த கில்சிர்ஸ்ட் என்ற ஆங்கில அதிகாரி இதற்குப் பெரிதும் காரணமாயிருந்தார். அவரு டைய தூண்டுதலின் பேரில் லல்லுபாய், சடல் மிஸ்ரா முதலியவர்கள் ஒன்றுகூடி பாரசீக மொழியிலிருந் தும், உருது மொழியிலிருந்தும் பல இலக்கியங்களை மொழி பெயர்த்தும், பல சொற்களை மாற்றியமைத் தும் புதுப்பித்தனர். அவர்கள் கையாண்ட முறை உருது மொழியிலிருந்த அரபி, பாரசீகச் சொற் களைத் தள்ளிவிட்டு, அதற்குப் பதிலாக சமஸ்கிருதச் சொற்களைப் போட்டு, புதுமொழி வழக்கை உண் டாக்குவதாகும். இந்த அமைப்பில் உருதுவின் வரிவடிவாகிய அரபி எழுத்துக்களுக்குப் பதிலாக, வடமொழியின் வரிவடிவாகிய தேவநாகரி எழுத் துக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. எனவே வழக்கிலிருந்த அரபி, பாரசீகச் சொற்களுக்குப் பதிலாக சமஸ்கிருதச் சொற்கள் புகுத்தப்பட்ட செயற்கை மொழியாக இப்பொழுது இந்தி என்று குறிப்பிடப்படும் மொழி உருப்பெற்றது.)

இந்தி தோன்றி 150 ஆண்டுகளுக்குள்தான் ஆகிறது. இதைக் கேட்டதும் இந்தி ஆதரிப்பாளர் களுக்கு உடனே அல்ல என்றுதான் சொல்லத்