பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மொழிப் போராட்டம்

தோன்றும். மொழி நூல் வரலாற்றை நன்றாக ஆராய்ந்தால் இந்தக்கூற்று உண்மை என்பதை அவர்களே ஒப்புக்கொள்வர். இதற்குச் சான்றாக வட இந்திய தலைவர்களின் பேச்சையும், இந்தி மொழியாசிரியர்களின் எழுத்தையுமே காட்டலாம். (இந்தி சம்மேளனத்தின் தலைவராக இருந்த வரும், தற்பொழுது அகில இந்திய காங்கிரஸ் தலை வராகவு மிருக்கிற ராஜேந்திர பிரசாத் அவர்கள் தாம் எழுதிய கட்டுரை ஒன்றில் "இந்தி ஒரு செயற்கைமொழி" என்பதை ஒப்புக்கொள்ளுகிறார். செயற்கைமொழி. என்று குறிப்பிடப்படுவதாவதுமிகக்குறுகிய காலத் தில் அவசரமாகக் கட்டாய முயற்சியின்பேரில் உண்டாக்கப்பட்ட மொழி என்பதாகும். . எல்லா மொழிகளும் உண்டாக்கப்பட்டவையே என்ற

போதிலும், காலப்போக்கில் தானாக

வளராமல் கட்டாயப்படுத்தி அவசியத்தையும் அவசரத்தையும் முன்னிட்டு வளர்க்கப்படும் மொழி பொதுவாக. செயற்கை மொழி என்று சொல்லப்படும்.

இந்தி மொழி எழுத்தாளர் தாரா சந்த் என்பவர் கூறுவதாவது:-

"தற்காலத்தில் இந்தி இவ்வாறு ஆரம்பித் ததைக் கூ கூறும்பொழுது சில இந்தி எழுத் தாளர்கள் எதிர்க்கின்றனர். நான் கவனித்த வரையில் அந்த எதிர்ப்பு பலனற்றது. தற் காலத்தில் இந்தி மொழியின் ஆரம்பத்தையும், வளர்ச்சியையும் விருப்பு, வெறுப்பற்ற முறை யில் ஆராய்ந்தால் இந்த ஒரே முடிவுக்குத்தான் வரவேண்டும். அதாவது: இந்தி மொழி 135