பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டில் மொழிச் சண்டை

39

ஆண்டுகளுக்குட்பட்டது. அதுகூட அதிகம் என்றுதான் கூறவேண்டும். ஏனென்றால் சடல்மிஸ்ராவும், லல்லுலால்ஜியும் இந்திமொழி யின் உதயத்தைக் கண்ட போதிலும், அந்த உதயம் நிலைபெறவில்லை. இருள் சூழ்ந்து கொண்டது. கவனிப்பாரற்று இருட்டில் இருந்தமொழி 1857க்கு அப்புறம்தான் இலக் கிய வளர்ச்சியைப் பெற்றது " என்பதாகும். இவர் கூற்றுப்படி இந்திதோன்றி சற்று ஏறக் குறைய 150 ஆண்டுகளான போதிலும் (தாராசந்த் எழுதியது 1935-ல்), இந்தி இலக்கியத்தின் முத லெழுத்து தோன்றி ஒரு நூற்றாண்டுகூட

வில்லை.

வட நாட்டில் மொழிச் சண்டை

ஆக

மொகலாயர் ஆட்சியில் பாரசீக மொழி அர சாங்க மொழியாக விளங்கியது. அரச அவையி லும், அரண்மனையிலும் பாரசீக மொழியே பேசப் பட்டது. அரசாங்கத்தின் ஆதரவில் வளர்ந்ததால் பாரசீகச் சொற்கள் அரண்மனையின் வெளியிலே யும் உலவ ஆரம்பித்தன. இக் காரணம் பற்றி தான் வடநாட்டு மொழிகளில் பாரசீகச் சொற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. மொகலாய ஆட்சி மங்கி, கிழக்கிந்திய கம்பெனி ஆளுங் கூட்டமான தும், பாரசீக மொழிக்கு இருந்த மதிப்பும், ஆதர வும் குறைந்து விட்டன. கடைசியாக 1837-ல் பார சீக மொழிக்குப் பதிலாக உருது அரசாங்க மொழி யாக ஆக்கப்பட்டது. மதவேற்றுமையும், மொழிச் சண்டையும் தலை தூக்காத அந்தக் காலத்தில்