பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மொழிப் போராட்டம்

உருது அரசாங்க முதன்மொழியாவதற்கு எந்த எதிர்ப்பும் உண்டாகவில்லை. உருது மொழியே வட இந்தியாவின் பெரும் பகுதியில் வழங்கும் மொழியாக இருந்தது. இன்று கருதப்படுவதைப் போல அக்காலத்தில் உருது முஸ்லிம்களின் மொழி என்று எண்ணப்படவில்லை. இந்து-முஸ்லிம் வேற்றுமை இன்றி எவரும் உருதுவை ஏற்றுக் கொண்டனர். இன்றுகூட வட இந்தியாவில் துக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில்தான் உருதுமொழி மிகுதியாக வழங்கப்படுகிறது. அன் றிருந்த அமைதியான நிலை நீடித்திருந்தால் உருது மொழி வட இந்தியாவிலுள்ள எல்லோராலும் ஏற் றுக் கொள்ளப்படும் முதன் மொழியாக வந்திருக் கும். ஆனால் எதிர்பாராத வரலாற்று நிகழ்ச்சி களால் சமாதான வளர்ச்சி தடைப்பட்டதல்லா மல், சச்சரவே மூண்டது.

இந்தியாவில்

சிப்பாய்க் கலகத்துக்குப்பின் தேசீய உணர்ச்சி உண்டாயிற்று. தேசிய உணர்ச் சியின் விளைவாக தேசிய காங்கிரஸ் பின் தோன்றியது. தேசிய இயக்கத்தில் ஈடுபட்டோர் துவக்கத்தில் பெரும்பாலும் இந்துக்களாக இருந்த தால் அவர்கள் பேசியவை பெரும்பாலும் இந்து தேசியம்பற்றியவையாக இருந்தன. இந்தியா என்று கூறும்பொழுது வேதகாலம், இந்து மதத் தின் பெருமை, இந்துக்களின் வரலாறு, இந்து கலாச்சாரம் இவை பெரும்பாலும் பேசப்பட்டன. தேசிய உணர்ச்சி இந்துமத மறுமலர்ச்சி இயக்க மாக எதிரொலித்தது. இத்துடன் சேர்ந்து சுவாமி