பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மொழிப் போராட்டம்

.

கள் இரண்டு வேறுபட்ட மொழிகளை உணர்த் தும் சொற்களாயின. இந்தப் பிரிவு உணர்ச்சி வளரலாயிற்று. தேசீய உணர்ச்சியில் இந்துக் கள் முதலில் ஈடுபட்டதால் தூய்மையான இந்தி மொழியையும், தேவநாகரி எழுத்தையும் வற்புறுத்தினார்கள். இதன் எதிரொலியே மொழி பற்றிய பிளவு. தேசியம், ஆரம்பத்தில் அவர்களுக்கு இந்து தேசியமாக்கப்பட்டது. சிறிது காலத்துக்கெல்லாம் முஸ்லிம்கள் தேசிய உணர்ச்சி பெற்றதும், அவர்கள் வகை யில் தேசியம் பரவியதுடன் உருது மொழியில் அதிக அக்கரை காட்டத் தொடங்கினார்கள்."

என்பதாகும்.) மேலும் தொடர்ந்து அவர் கூறும் போது, "தேசிய உணர்ச்சி முற்றிலும் வளர்ந்த தும், இந்த வேறுபாடுகள் மறைந்துவிடும்" என எழுதியுள்ளார். அவர் எழுத்துக்கள் இவ்விதமாக இருந்தனவே யொழிய, வரலாற்றின் எழுத்துக்கள் வேறுவிதமாக இருந்தன. இந்தி - உருது பிரச்சினை, இந்து - முஸ்லிம் பிணக்காகி, இந்து கலாச்சாரம்—இஸ் லாமிய கலாச்சாரம் என்ற பேச்சாகி, இந்து தேசியம் முஸ்லிம் தேசியம் என வளர்ந்தது. நேரு கூறிய தற்கு மாறாக தேசியம் பழுத்துப் பயன் தரும் சம யத்தில் இந்தியா பிரிக்கப்பட்டால்தான் விடுதலை கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டு, இறுதியாக விடுத லையும் பிரிவினையும் ஒரே காலத்தில் நிகழ்ந்து தீர வேண்டியவைகளாகிவிட்டன. ஆனால் ஆரம்பத்தில் இந்தி-உருது என்ற மொழிப் பிரச்சினைமட்டுமே இருந்தது.