பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட நாட்டில் மொழிச் சண்டை

43

இந்தி-உருது தகராறில் அரபிச் சொற்களை வைத்துக் கொள்வதா அல்லது அவற்றைத் தள்ளி விட்டு சமஸ்கிருதச் சொற்களை நுழைப்பதா என்று. ஆரம்பக் கேள்வி எழும்பொழுது இந்து முஸ்லிம் என்ற மத வேறுபாடு தோன்றவில்லை. வழக்கி லிருக்கும் பாரசீக-அரபிச் சொற்களைத் தள்ளக் கூடாது என்று வாதிட்டவர்களில் முதன்மையாக விளங்கியவர் ராஜா சிவபிரஸாத் என்பவராவர். சமஸ் கிருதச் சொற்களை நிரப்பவேண்டும் என்று வாதிட் டவர்களில் தலைமை தாங்கியவர் ராஜா லக்ஷ்மணசிங் என்பவராவார். இவர்கள் இருவரும் இந்துக்களே. ஆனால் மொழிப் பிரச்சினையில் இவர்களேயன்றி வெள்ளை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். சிற் சில பொழுது தாங்கள் கூறுவதையே முடிவாகக் கொண்டு நடைமுறையில் கொணரவும் செய்தனர். இந்தி மொழியின் ஆரம்பத்தை நோக்குகையில், இந்துக்களுக்கென தனி மொழி வேண்டும் என லல்லுலால், சடல் மிஸ்ரா போன்றவர்களை அழைத்துப் புதுமொழியை உருவாக்கச் சொன்னவர் கில்சிர்ஸ்ட் என் ற

ஆங்கில அதிகாரியாவார். பின்பு சிவ பிரஸாத், லக்ஷ்மண் சிங் இருவரும் முறையே பாரசீக அரபி சொற்களுக்கும் - சமஸ்கிருதச் சொற்களுக் கும் வாதிட்டபொழுது, சிவபிரஸாத் சார்பாக ஜான் பீம்ஸ் என்ற ஆங்கிலேயரும், லக்ஷ்மண் சிங் சார் “பாக எப் எஸ். கிரௌஸ் என்ற ஆங்கிலேயரும் விடாப் பிடியாக நின்று வாதிட்டனர். இந்த மொழிப் பிரச்சினையில் (கிருஸ்துவ பிரசார சபைகளும் பங்கு கொண்டன. பொதுவாக வெள்ளையதிகாரி களின் பக்க துணையும் அரசாங்க ஆதரவும் சமஸ்