பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மொழிப் போராட்டம்

உண்டாக்கப்பட்ட

இலக்கியங்களில் சமஸ்கிருதச்சொற்களை அமைத்து இலக்கியங்களைத்தவிர விரி வான இலக்கியம் எதுவும்உண்டாகவில்லை. மாளவியா இந்திக்காகப் பாடுபட்ட பொழுதுதான் தனியான இலக்கியம் இந்தியில் தோன்ற ஆரம்பித்தது. மாள வியாவும், அவரது சனாதன ஆதரிப்பாளர்களும் சமஸ்கிருதப் பயிற்சியை வளர்த்ததுடன், இந்தி யில் இலக்கிய வளர்ச்சியையும் உண்டாக்கினார்கள்.

(1910ல் இந்தி சாஹித்ய சம்மேளனம் ஆரம் பிக்கப்பட்டது. இந்தக் காலத்தில் தேசிய காங் கிரஸ் வலுவடையத் தொடங்கியது. தேசிய உணர்ச்சியோடு இந்தியாவின் அரசாங்க மொழி யாக இந்தி வரவேண்டுமென்ற எண்ணமும் வளர்ந் தது. காந்தியார், ராஜேந்திர பிரசாத், காகா கலேல்கார் போன் றவர்கள் இரதி அரசாங்க மொழியாக வேண்டுமென்ற இயக்கத்தைப் பரப்புவதில் ஈடுபட் டனர். காந்தியாரின் தனிப்பட்ட செல்வாக்கும், காங்கிரசின் விரிந்த அமைப்பும் உதவி செய்த தால் இந்திப் பிரசாரம் இந்தியா முழுவதும் பரவி யது. லட்சக் கணக்கில் நிதி சேர்க்கப்பட்டு, பிர

சாரம்

பலப்படுத்தப்பட்டது. இந்தியின் உச்ச ரிப்பை முன்பின் கேட்டறியாத எல்லைப்புறம், பஞ்சாப், சென்னை மாகாணங்களில்கூட இந்திப் பிரசார சபைகள் ஆரம்பிக்கப்பட்டன. விடுதலை யடைய இந்தியா ஒன்றுபட்டுப் போராடவேண்டும்; அந்த ஒற்றுமையை அடைய ஒரே மொழியாக இந்தி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற பிரசாரம் தேசிய இயக்கத்துடன் வளர்ந்தது.