பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மொழிப் போராட்டம்


இந்திக்கு எதிர்ப்பு வலுத்து; இந்தி எதிர்ப்பு இயக்கம் உருண்டு திரண்டது. பிரச்சினை பேசுங் கட்டத்தைக் கடந்து, போராட்டக் கட்டத்தை அடைந்தது. போராட்ட வீரர்கள் சென்னை நோக்கி விரைந்தனர். பாசறை அமைக்கப்பட்டது; களங் காணப்பட்டது. சென்னை இந்து தியலா ஜி கல் உயர்நிலைப் பள்ளியின் முன் மறியல் போராட் டம் துவங்கியது. தோழர் சி.டி. நாயகம், கருவூர் அறிவுதயக் கழக ஆசிரியராக இருந்த ஈழத்து சிவா னந்த அடிகள் முதலாயினோர் ஆணையாளராக நிய மிக்கப்பட்டனர். மறியல் ஆரம்பித்ததும் மந்திரி சபை அடக்குமுறைக் கடுமையை வீச ஆரம்பித் தது. வீட்டிற்குள் வந்தவனை விரட்டியடிக்கக் கையில் கிடைத்ததை உபயோகிப்பேன் என்று முதலமைச்சர் ஆச்சாரியார் பேசினார். எந்த இந் திய பினல் கோடு சட்டத்தை உடைத்தெறியப் போவதாகக் காங்கிரஸ் வீரர்கள் வீர முழக்க மிட் டனரோ அந்தப் பினல் கோடு சட்டத்தை ஆட்சி மன்றம் ஏறிய பிறகு, அவர்கள் அணைத்து முத்த மிடத் தயங்கினார்களில்லை. அதிலிருந்து பிறந்த திருத் தச் சட்டங்கள் பலவும் இந்தி எதிர்ப்பாளர்கள் மீது வீசப்பட்டன.

தமிழகத்துக்குள் கேள்வி முறையில்லாது நுழைந்த இந்தியைத் தமிழ் மக்கள் எதிர்க்கத் துணிந்தனர். "வீட்டிற்குள் வந்தவனை விரட்டி யடிக்கக் கையில் கிடைத்ததை உபயோகிப்பேன் " என்று ஆச்சாரியார் கூறினாரே உவமானம் அது போல, அது சற்று அவசரத்தில் - அவருக்காக -