பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மொழிப் போராட்டம்

பிரசாரம் எள்ளளவும் தடைப்படுத்தப் படவில்லை. காங்கிரஸ் தலைவர்களும் காங்கிரஸ் ஆதரவில் வளர்க்கப்பட்ட இந்திபிரசார சபைகளும், காந்தி யார் தலைமை பூண்ட இந்தி சாஹித்ய சம்மேளன மும் தத்தம் இந்திப் பிரசாரத்தை வலுப்படுத்தி னார்களே யொழிய குறைத்துக் கொள்ளவில்லை. 'கேள்விகேட்ட நிலையில் பதிலளிக்கும்போது மட் டும் இந்துஸ்தானி என்ற சொல் பயன்படுத்தப் பட் டதே தவிர, மற்றபொழுதுகளில் வெளிப்படை யாகவே இந்திப் பிரசாரம் காங்கிரஸ் தலைவர் களால் செய்யப்பட்டது. 1937-ல் காங்கிரஸ் மாகா ணங்களில் மந்திரிசபை அமைத்தும் இந்திக் கல்வி கொண்டுவரப்பட்டது. குறிப்பாகச் சென்னை மாகாணத்தில் கட்டாயமாகக் கொண்டுவரப்பட் 1931-ல் நிறைவேற்றப்பட்ட காங்கிரஸ் தீர் மானத்தைக் காரணமாகக் காட்டியபோதிலும், உண்மையில் இந்திதான் கட்டாயப் பாடமாக்கப் பட்டது. இந்துஸ்தானி என்ற பெயருக்குச் செல் வாக்கு ஏற்படவில்லை.)

டது.

காங்கிரசின் இந்துஸ்தானி தீர்மானத்தை காங்கிரஸ்காரர்கள் காற்றில் பறக்க விட்டுவிட்டு, இந்திப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதை மற்றொரு எடுத்துக்காட்டால் விளக்கிக்காட்ட முடி யும். காங்கிரஸின் தீர்மானத்தைக் காங்கிரஸ் நிறைவேற்றத் தவறியதுடன், அதைப் புறக்க ணிக்குமளவுக்கு இந்திப் பிரசாரத்தில் காங்கிரஸ் காரர்கள் கலந்து கொள்வதைத் தடுக்க டாக்டர் அஷ்ராப் 1938-ல் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் தீர்மானம் கொண்டுவந்தார். இந்திப் பிரசாரத்தில் காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள் ளக்கூடாது என்பது தீர்மானத்தின் நோக்கம். தீர்மானம் பெருவாரியான ஓட்டுக்களால் தோற் கடிக்கப்பட்டுவிட்டது.