பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்துஸ்தானி

53

இந்தி- உருது என்று சண்டையிடக் கூடாது; இந்துஸ்தானிதான் பொது மொழியாக வேண்டும் எனக் கிளப்பிய அதே காங்கிரஸ், இந்துஸ்தானி யைக் கைவிட்டு இந்தியை மேற்கொண்டது.

இந்தி-உருது சண்டை வளர்ந்துகொண்டே செல்லுகையில், உருது மொழியை ஆதரித்து 1938-ல் லக்னோவில் கூடிய முஸ்லிம்லீக் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. 1938 டிசம்பர் 18-ம் நாள் உருதுமொழித் தினமாகக் கொண்டாடப் வட இந்தியாவில் இந்தி-உருது போராட் டம் அரசியல் விவகாரங்களோடு இணைந்து வேறு பல பிரச்சினைகளைக் கிளப்பிவிட்டது.

பட்டது.

தென்னாட்டில் இந்தியைக் கட்டாயமாகத் திணிக்கும்போது போராட்டம் எழுந்தது. இங்கே துவங்கிய போராட்டம் இந்தி-உருது போராட்ட மல்ல, இந்தி - தமிழ்ப் போராட்டம். போராட்டம். காங்கிரஸ் மந்திரிசபை கலையும்வரை போராட்டம் நீடித்தது.

இந்து-முஸ்லிம் பிளவு முற்றி, இந்தியா பிரிக் கப்பட்ட பின், காங்கிரஸின் பொதுமொழிக் கொள்கை இந்தி என்பது உறுதியாகி விட்டது. இந்துஸ்தானி பொது மொழியாக வேண்டுமென் பது என்னவாயிற்று? இந்தியை இந்துஸ்தானி என்று ஒப்புக்காக அழைத்து அந்தக் கொள் கையை நிலைநாட்ட முயலுகிறார்கள் சிலர். இப் பொழுது இந்துஸ்தானி என்று அரசியலாரும், அதனை அண்டிவாழும் ஏனையோரும் ஆதரிப்பாள ரும் வழங்குவது இந்தியைத்தான். எந்த நோக்கத் தோடு இந்துஸ்தானி பெற்றெடுக்கப் பட்டதோ அந்த நோக்கமும் கைவிடப்பட்டு அதனைப் பெற் றெடுத்தவராலேயே அதுவும் கைவிடப்பட்டு பிறந்த இடத்தில் பிறந்த பொழுதே அது இறந்து விட்டது.

இந்தி- உருது மொழிகள் பற்றிய தவறான கருத்து ஒன்று சிலரால் சொல்லப்பட்டு வருகிறது.