பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்துஸ்தானி

55

இந்தி - உருது, இந்து-முஸ்லிம் வேற்றுமை எவ் வளவு தூரம் பரவியிருந்தது என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு. ஒரே பகுதியில் வாழும் இந்துக் களும், முஸ்லிம்களும் ஒரே தாய் மொழியைப் பெற் றிருந்த போதிலும், அவர்கள் வழங்கும் சொற் களில் வேறுபாடு இருக்கக் காண்கிறோம். ஐ. மாகா ணத்தில் இந்துக்களின் மத்தியில் ஒரு முஸ்லிம் வாழ்ந்தாலும் அவனுடைய வீட்டில் உருது, அரபிச் சொற்கள் மிக வழங்குவதைக் காணலாம். அதே போல் காஷ்மீர் பகுதியில் முஸ்லிம்களிள் இடை யில் ஒரு இந்து இருந்தாலும் அவனது வீட்டில் வழங்கும் மொழியில் சமஸ்கிருதச் சொற்கள் நிரம்ப இருப்பதைக் காணலாம்.

το

கல்கத்தா நகருக்குச் சென்று "இந்தப் பகுதி யில் தாய்மொழி எது?" எனக் கேட்டால் “பெங் காளி" என்று பெருமிதத்துடன் கூறுவார்கள். "இந்து-முஸ்லிம் இருவரும் ஒரே தாய்மொழியைப் பயன் படுத்துகின்றனரா?” என்று வினவினால் "சந் தேகமென்ன?” என்று உறுதி கூறுவார் கள். அந்த நாட்டுமொழி தெரியாத ஒருவர், நீர் வரட்சிகொண்டு ஒரு இந்துவிடம் சென்று, தனக் குத் தெரிந்த ஓரிரு சொற்களில் "பானி, பானி” என்று எவ்வளவு தடவைக் கேட்டாலும் தண்ணீர் கிடைக்காது. அதை விடுத்து மற்றும் இரண்டு மூன்று இந்துக்களிடம் 'பானி, பானி' என்று எவ் வளவு தான் பல்லவி பாடினாலும், கதவைத் தாழி டும் ஓசை கேட்குமே யொழிய தண்ணீர்க் குவளை வராது. ஏனென்றால் கல்கத்தாவில் வாழும் இந்துக் களிடம் 'தண்ணீர்' என்பதற்கு 'ஜல்' என்று கேட் டால்தான் தண்ணீர் கிடைக்கும். தண்ணீரைக் குறிப்பிடுவதற்கு 'பானி' என்ற சொல் வட இந்திய மொழிகள் பலவற்றிலும், பெங்காளி மொழியில்