பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மொழிப் போராட்டம்

இருந்தபோதிலும் இந்துவின் வீட்டில் 'ஜல்' என்ற சமஸ்கிருதச் சொல்தான் பயன்படுத்தப்படுகிறது.

மறுநாள் நாவரட்சி ஏற்பட்டதும் முதல்நாள் தெரிந்துகொண்ட பாடத்தை வைத்துக்கொண்டு, அந்த இந்துவின் பக்கத்து வீட்டிலிருப்பவனிடம் போய் ‘ஜல்' எனக் கேட்டதும் அந்த வீட்டிலிருப்ப வன் இந்துவாயிருந்தால், அதுவும் இரக்கமுள்ளவ னாக இருந்தால், மேலும் தண்ணீர் கேட்பவன் இந்து என்ற நம்பிக்கை உண்டானால் தன்ணீர் கிடைக்கும். பக்கத்து வீட்டுக்காரன் முஸ்லிமா யிருந்தால் முறைத்துப் பார்த்துவிட்டுப் போய்விடு வான், சமாதான காலமாக இருந்தால். முஸ்லிம் களின் வீட்டில்தான் தண்ணீர் என்பதற்கு 'பானி' என்றசொல் வழங்கப்படுகிறது. அது உருதுச் சொல். ஒரே இடத்தில், ஒரே தாய் மொழியைக் கொண்டு பக்கத்து வீடுகளில் இருக்கும் இந்து, முஸ்லிம் இருவரில் தண்ணீரைக் குறிக்க 'ஜல்' என்ற சமஸ்கிருதச் சொல்லை இந்துவும், 'பானி' என்ற உருதுச் சொல்லை முஸ்லிமும் வழங்குகின்ற னர். அந்த வழக்கத்தைக் கட்டுப்பாடுடன் பாது காக்கின்றனர்.('பானி' என்று சொன்னால் அவன் ஒரு முஸ்லிம் என்றும், 'ஜல்' என்று சொன்னால் அவன் ஒரு இந்து என்றும் கூறுமளவுக்கு இவர்க ளுடைய பேச்சுமொழி அமைந்திருக்கிறது.) மத வெறுப்பு அதிகரித்திருந்த சமயத்தில் இந்து வீட் டில் போய் 'பானி' என்றும், முஸ்லிம் வீட்டில் போய் 'ஜல்' என்றும், ஒன்றிற்கொன்று மாறிக் கேட்டால் பிற மதத்தினனென்று தண்ணீர் கிடைக்காமல் போவதுடன், வகுப்புக் கலவரமும் அடிதடியும் பிறந்தாலும் பிறக்கும். தண்ணீர் கேட்கப்போய் இரத்தம் கிடைக்கும் நிலை உண்டா கலாம். இதேபோல் குஜராத்தி, மராட்டி மொழி