பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்துஸ்தானி

57

களிலும் இந்துக்களும், முஸ்லிம்களும் பயன்படுத் தும் சொற்களில் வேற்றுமை இருக்கிறது.

இதுகாறும் கூறியவற்றால் இந்தி உருது இவை களின் வரலாறும், மொழிச் சண்டை ஆரம்பித்த விதமும், பின் பொதுமொழி விவாதம் வந்ததும், இந்தி-உருது சண்டை இந்து-முஸ்லிம் பிளவாக வளர்ந்ததும் நன்கு விளங்கும். மொழிச் சண்டை ஆரம்பித்தது வடநாட்டில்; பொதுமொழிப் பிரச் சினையை விவாதித்தவர்கள் வடநாட்டாரே. எனவே பொது மொழியொன்று தேவை என்பதற்கு அவர் கள் தந்த காரணங்கள், எந்தமொழி பொது மொழி யாவதற்குரியது என்று அவர்கள் காட்டிய ஆதா ரங்கள், பின் இந்தி, உருது இருமொழிகளையும் தள்ளி இந்துஸ்தானி என்ற புதுமொழியைப் பொது மொழியாக்கப் போடப்பட்ட தீர்மானங்கள், இவை களைப் படிக்கும்பொழுது, வட இந்திய மொழி அமைப்பையும், பலமொழி பேசுவோரிடை நிலவிய விருப்பு வெறுப்புக்களையும், முக்கியமாக இந்து முஸ்லிம் பிணக்கையும் அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் அவர்கள் தங்கள் காரணங்களை அமைத்தார்கள் என்பது விளங்கும். பொது மொழி யென திட்டமிட்டபொழுதும், திட்டங்களுக்கு விளக்கங்கள் கூறியபொழுதும், திட்டங்களை அமுலுக்குக் கொண்டுவர லட்சக்கணக்கான பொருளையும், தேசியத் தொண்டர்களின் உழைப்பையும் செலவிட்டுப் பிரசாரம் செய்த பொழுதும், பின் திடீரென்று சமாதான மொழியாக ஒன்றைத் தீர்மானத் தின் மூலம் அமைத்தபொழுதும், பின் எவ்வழியும் சண்டை யைத் தீர்க்காது என்று சஞ்சல மடைந்த நேரத்திலும் தென் ஓடு அவர்கள் கருத்தில் பட்டதாகத் தெரியவில்லை. பொது மொழித் திட்டத்தைத் தாங்களாகவே முடிவு செய்துவிட்டு, அதைச் செயலளவில் காட்டும். பொழுதுதான் சென்னை மாகாணம் அவர்களின் பெரிய கண்களுக்குத் தெரிந்தது.