பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்றும் இன்றும்

7

அவரால் சொல்லப்பட்டதாகும். உவமானம் அவருக்குப் பொருந்துவதைவிட தமிழக மக்களுக் குச் சரியாகப் பொருந்தக்கூடியதாகும். வீட்டிற் குடைய தமிழர்கள் வெளியிலிருந்து வந்த இந்தியை விரட்டியடிக்க ஆரம்பித்தார்கள், ஆச்சாரியார் சொல்லிக்காட்டி யதற்கொப்ப.

பெரியார் ஈ. வெ. ராமசாமி தலைமையின்கீழ் இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழ் நாடெங்கும் பரவிற்று. அதை அலட்சியப்படுத்தச் சொல்லிற்று ஆச்சாரி யாரின் ஆணவம்; அதைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தது மக்களின் ஆர்வம். "நாட்டு மொழியைக் காக்க வீட்டிற்கொரு பிள்ளை தேவை" என்று அறிஞர் அண்ணுத்துரை அவர்கள் முழக்கமிட்டார்.) சர். ஏ.டி.பன்னீர்ச்செல்வம், தோழர்கள் கே.ஏ.பி. விசுவ நாதம், அ. பொன்னம்பலனார் போன்றவர்கள் நாட்டின் திக்கெட்டும் பவனி வந்து, வீரவுரை ஆற்றி வெற் றிக் களிப்பூட்டினர். காவியம் தீட்டும் கவிஞரி லிருந்து, கமண்டலம் ஏந்தி நாடு சுற்றிவரும் காவி வேட்டிக்காரர்கள் வரையுள்ள பல்வேறு பிரிவின ரும் போராட்டத்தில் பங்கு கொண்டனர். ஆயிரத் தைந்நூற்றுக்கு மேற்பட்ட அருந்தொண்டர்கள் சிறைக்கூடத்திலே தள்ளப்பட்டார்கள். பச்சிளங் குழந்தைகளைக் கையிலேந்திய நங்கைமாரும், தலை நரைத்துப்போன மூதாட்டியரும் வெஞ்சிறை நண் ணினர். மாதர் மாநாட்டில் தாய்மார்களை இ தியை எதிர்த்துப் போரிடும்படியாகச் சொல்லித் தூண்டினார் என்ற குற்றமும், வேறோர் குற்றமும் சாட்டப்பட்டு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும்