பக்கம்:மொழிப் போராட்டம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னாடும் திராவிடக் குழுமொழிகளும் 63

அம்மொழிகளிலிருந்து சமஸ்கிருதச் சொற்களை அறவே களைந்து எடுத்துவிட்டால் மிகுதி இருக்கும் சொற்கள் தூய தமிழ்ச் சொற்களாகவே இருக்கக் காணலாம் மலையாளத்தை எடுத்துக்கொண்டு அதி லுள்ள தூய வடமொழிச் சொற்களை ஒருபக்கம் எடுத்துவைத்துவிட்டு, அதில் வழங்கும் தூய தமிழ்ச் சொற்களை மற்றொருபுறம் எடுத்து வைத்துவிடு வோமேயானால் மிகுதியிருக்கும் சொல் ஒன்றுகூட காணமுடியா து.

வடமொழி, படையெடுப்போடு வடவாரியர் கலாச்சாரம், நாகரிகம், பண்பு, பழக்க வழக் கம், கொள்கை, கோட்பாடுகள் அனைத்தும் படை யெடுக்கத் தொடங்கின. தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளும் தம் தன்மைகளை ஓரளவுக்குக் கொண்டிருந்தாலும் பெரும் பகுதிகள் அந்தப் படையெடுப்புகளுக்கு இரையாயின. என்றாலும், திராவிட மொழிக்குரிய இலக்கணப் பண்புகள் தமிழ்தான் அவற்றிற்கு இரையாகாமல் சிறிதளவு காயங்களே ற்பட்டாலும் இன்னமும் சளைக்காமல் எதிர்த்துப் போராடி வரு கிறது. வடமொழி நாகரிகம் – தமிழ் நாகரிகம் - என்று பிரித்துக் கூறக் கூடிய நிலைபில்தான் கருத் துக்கள் உலாவி வருகின்றன.

வடமொழியும் - தமிழ் மொழியும் தனித்து நிற் பது போலவே, வடமொழியும் பிறமொழியும் சேர்ந்த நாகரிகம் படைத்த வட நாட்டவரும்-தமிழ் நாகரிகம் அதாவது திராவிட நாகரிகம் படைத்த தென்னாட்டவரும் ஒத்துப்போக இயலா தவர்களாய் எவ்வகையிலும் தனித்துப் பிரிந்து வாழ வேண்டிய வர்களாகவே இருந்து வருகின் றனர். பொதுவாக நோக்கும்போது திராவிடக் குழுமொழிகள் வழங் கும் திராவிடம் குறிப்பாகத் தமிழகம் இந்தியாவின் ஏனைய பகுதியோடு இணைந்து வாழ

முடியாத